Posted in

3 குழந்தைகளின் தாய்க்கு கணவன் செய்த கொடூரம்

3 குழந்தைகளின் தாய்க்கு கணவன் செய்த கொடூரம் குறித்த செய்தி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டை அருகே உள்ள மதுக்கூர் கோபாலசமுத்திரம் பகுதியில் நடந்த கொடூர சம்பவம், மாவட்ட மக்களையும் சமூகத்தையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. மனைவியின் திருமணம் தாண்டிய உறவு காரணமாக மன உளைச்சலுக்கு ஆளான தந்தை, தனது மூன்று சிறு பிள்ளைகளையும் அரிவாளால் வெட்டி கொன்றுள்ளார்.

மதுக்கூர் பகுதியைச் சேர்ந்த வினோத் குமார் (38), முன்பு லாரி ஓட்டுநராக இருந்தவர். தொழில் நஷ்டத்தால் தற்போது அருகிலுள்ள ஹோட்டலில் சர்வராகப் பணியாற்றி வந்தார். அவரது மனைவி நித்யா (35), சமூக வலைதளங்களின் மூலம் மன்னார்குடியைச் சேர்ந்த ஒருவருடன் நட்பு வளர்த்ததாகக் கூறப்படுகிறது. இந்த உறவு திருமணத்திற்குப் பிறகே தொடங்கியதாகவும், இது குறித்து வினோத் குமார் கண்டித்தபோது தம்பதியரிடையே அடிக்கடி சண்டைகள் ஏற்பட்டதாகவும் போலீஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.

ஆறு மாதங்களுக்கு முன் நித்யா கணவரையும் பிள்ளைகளையும் விட்டு பிரிந்து, காதலனுடன் வாழத் தொடங்கினார். இதனால் மன உளைச்சலுக்கு ஆளான வினோத் குமார், மது மற்றும் போதைப்பொருளுக்கு அடிமையானதாக உறவினர்கள் தெரிவித்துள்ளனர்.

அக்டோபர் 10 மாலை, வேலையில் இருந்து வீடு திரும்பிய வினோத் குமார், மது போதையில் இருந்ததாகவும், பிள்ளைகளுக்கு டீக்கடையில் வாங்கிய பக்கோடா கொடுத்ததாகவும் கூறப்படுகிறது. அவர்கள் சாப்பிடத் தொடங்கியபோது, திடீரென அரிவாளை எடுத்து 5 வயது மகன் ஈஸ்வரன், 8 வயது மகள் கீர்த்தி மற்றும் 12 வயது மகள் ஓவியா ஆகிய மூவரையும் ஒன்றன்பின் ஒன்றாக வெட்டி கொன்றார்.

பின்னர் உடல்களை வரிசையாக வைத்து, உறவினர்களுக்கு தொலைபேசியில் “என் பிள்ளைகளை நான் கொன்றுவிட்டேன்” என கூறியுள்ளார். பின்னர் மதுக்கூர் காவல் நிலையத்துக்குச் சென்று இரவு 8 மணியளவில் சரணடைந்தார்.

போலீசார் வினோத் குமாரை கைது செய்து விசாரணை மேற்கொண்டனர். பட்டுக்கோட்டை டி.எஸ்.பி தலைமையில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

அப்பகுதி மக்கள் இந்த சம்பவத்தால் அதிர்ச்சியடைந்துள்ளனர். அக்கம் பக்கத்தினர் கூறுகையில், “நித்யா பிரிந்த பிறகு வினோத் தனது பிள்ளைகளைக் கவனித்து வந்தார். மூத்த மகள் ஓவியா தன்னுடைய சகோதரர்களுக்காக சமைத்து, வீட்டுப் பொறுப்புகளைச் செய்தாள். அப்படி அன்பான பிள்ளைகளை கொன்றது மனிதநேயத்துக்கே அவமானம்” என கண்ணீர் மல்க தெரிவித்தனர்.

இந்த சம்பவம் சமூக வலைதளங்களில் பரவியுள்ள நிலையில், பலரும் திருமணம் தாண்டிய உறவுகளுக்கான சட்டங்கள் மிகவும் பலவீனமாக உள்ளன எனக் கூறி அதனை கடுமைப்படுத்த வேண்டுமென வலியுறுத்துகின்றனர். சிலர், “விவாகரத்து பெறாமல் புதிய உறவுக்குள் செல்லும் நபர்களுக்கு கடுமையான தண்டனை வழங்கும் சட்டம் கொண்டு வர வேண்டும்” என கோருகின்றனர்.

சட்ட வல்லுநர்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள், “திருமண வாழ்வில் ஏற்படும் மன உளைச்சல், தனிமை, துரோகம் போன்ற காரணிகளை கையாள மனநல ஆலோசனை மற்றும் சட்ட சீர்திருத்தங்கள் அவசியம்” எனக் கூறியுள்ளனர்.

மதுக்கூர் பகுதியில் நிகழ்ந்த இந்த சம்பவம், குடும்ப உறவுகளில் ஏற்பட்டிருக்கும் நம்பிக்கை இழப்பு மற்றும் சமூக ஊடகங்களின் தீய தாக்கத்தை வெளிப்படுத்தும் சம்பவமாகவும், அரசாங்கம் கடுமையான நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Discover more from News V Tamil

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading