மருமகனுடன் மாமியார் செய்த மோசமான செயல் குறித்த செய்தி இணையத்தில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

உத்தர பிரதேஷ் மாநிலத்தின் பாக்பத் மாவட்டத்தில் உள்ள ஜீவன் கிராமத்தில் நடந்த ஒரு கொடூரமான கொலை சம்பவம் அந்தப் பகுதி மக்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. சோமு (வயது 40) என்ற பிளாஸ்டிக் வியாபாரி, தனது மனைவி சோனியா (35) மற்றும் மாமியார் சரோஜினி (50) ஆகியோருடன் சந்தோஷமாக வாழ்ந்து வந்தார்.
குழந்தை இல்லாத போதிலும், கிராம மக்கள் இவர்களை ஒரு மாதிரி குடும்பமாகப் பார்த்து பாராட்டினர். சோமு தனது மாமியாரை அம்மாவைப் போல பார்த்துக்கொண்டார் என்று அனைவரும் புகழ்ந்தனர். ஆனால், 2025 அக்டோபர் மாதம் இந்தக் குடும்பத்தில் நடந்தது ஒரு பெரிய அதிர்ச்சி.
சோமுவின் அண்ணன் மோனு, தன் தம்பி சோமுவை தொடர்பு கொள்ள முயன்றபோது போன் சுவிட்ச் ஆஃப் ஆக இருந்தது. இரண்டு நாட்களுக்குப் பிறகு வீட்டுக்கு வந்த மோனு, சோமு காணாமல் போனதைக் கண்டு அதிர்ச்சியடைந்தார். வீட்டில் இருந்த சோனியாவும் சரோஜும், “சோமு வேறொரு பெண்ணுடன் ஓடிப்போய்விட்டார்.
குழந்தை இல்லாததால் வேறு ஒருத்தியுடன் திருமணம் செய்துகொள்ளப் போய்விட்டார்” என்று கூறினர். ஆனால், கிராம மக்கள் சொன்னது வேறு. “அக்டோபர் 15-ஆம் தேதி சோமு தூக்கிட்டு இறந்துவிட்டார். குழந்தை இல்லாத டிப்ரஷனால் தற்கொலை செய்துகொண்டார் என்று சோனியாவும் சரோஜும் சொல்லி, இறுதிச் சடங்குகளை முடித்துவிட்டனர்” என்றனர்.
இதைக் கேட்ட மோனுக்கு சந்தேகம் வந்தது. ஏன் தற்கொலை என்ற உண்மையை மறைத்து, ஓடிப்போனதாகப் பொய் சொல்கிறார்கள்? உடனே போலீசில் புகார் அளித்தார். போலீசார் விசாரணையில் பல உண்மைகள் வெளிவந்தன. முதலில், சோமு தனது மாமியார் சரோஜினி பெயரில் ஒரு பெரிய நிலத்தை வாங்கிக் கொடுத்திருந்தார்.

ஆனால், நிலத்தின் மதிப்பு சமீபத்தில் அதிகரித்த பிறகு, அதை திரும்ப விற்று பணம் வேண்டும் என்று கேட்டார். சரோஜினி மறுத்துவிட்டார். இதனால் இருவருக்கும் பிளவு ஏற்பட்டது.
மேலும் அதிர்ச்சி: சோமுவுக்கும் மாமியார் சரோஜினிக்கும் நீண்ட காலமாக தவறான உறவு இருந்தது. தன்னுடைய மகளுக்கே சக்களத்தியாக மாறியுள்ளார் சரோஜினி. சோனியாவுக்கு தெரியாமல் மருமகனுடன் அடிக்கடி உல்லாசமாக இருந்து வந்துள்ளார் சரோஜினி.
சோமு தனது மொபைலில் அவர்கள் இருவரும் நிர்வாணமாக இருக்கும் அசிங்கமான வீடியோக்களை எடுத்து வைத்திருந்தார். இந்த வீடியோக்களை வைத்து சரோஜை மிரட்டி, நிலத்தை திரும்ப எழுதிக் கொடுக்கச் சொல்லி வற்புறுத்தினார். இதை அறிந்த மனைவி சோனியா, முதலில் அதிர்ச்சியடைந்தாலும், தாயுடன் சேர்ந்து கொலை திட்டம் தீட்டினார்.
சொத்தில் பங்கு வேண்டும் என்ற ஆசையால், இருவரும் சோமுவை கொல்ல முடிவு செய்தனர். அக்டோபர் 15 இரவு, சோனியா பாலில் தூக்க மாத்திரை கலந்து சோமுவுக்கு கொடுத்தார். மயக்கமடைந்த சோமுவின் கழுத்தில் கயிறு கட்டி, இருவரும் சேர்ந்து இழுத்துக் கொன்றனர்.
பிறகு, சவத்தை தூக்கில் தொங்கவிட்டு, தற்கொலை போல காட்டினர். இறுதிச் சடங்குகளை விரைவாக முடித்தனர். சோமுவின் மொபைலை பூட்டி மறைத்திருந்தனர். போலீசார் அதை கண்டுபிடித்து, வீடியோக்களைப் பார்த்த பிறகே உண்மை தெரியவந்தது.
விசாரணையில் சோனியாவும் சரோஜும் குற்றத்தை ஒப்புக்கொண்டனர். இந்தச் சம்பவம் கிராமத்தையே உலுக்கியுள்ளது. ஒரு குடும்பத்தில் நம்பிக்கை, உறவு, சொத்து ஆசை எல்லாம் கலந்து ஒரு கொலையாக மாறியது வேதனை அளிக்கிறது.
போலீசார் இருவரையும் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர். வழக்கு நீதிமன்றத்தில் நடந்து வருகிறது. இதுபோன்ற சம்பவங்கள் உறவுகளின் முக்கியத்துவத்தை நினைவூட்டுகின்றன. காம ஆசைக்காகவோ, சொத்து ஆசைக்காகவோ உறவுகளை அழிக்காதீர்கள் – இது ஒவ்வொருவருக்கும் ஒரு பாடம்.
