கணவனுக்கு நம்பிக்கை துரோகம் செய்த மனைவி குறித்த செய்தி இணையத்தில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

திருமண உறவில் நம்பிக்கை துரோகம் எந்த அளவுக்கு கொடூரமாக மாறும் என்பதை கண் முன்னே காட்டும் ஒரு பரபரப்பான சம்பவம் தற்போது கொல்கத்தாவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்த சம்பவத்தில் வரும் இளம் பெண் பிரியா (22), அவரது முன்னாள் காதலன் அர்ஜுன் (25), மற்றும் பிரியாவின் கணவர் விக்ரம் (28) ஆகியோரின் வாழ்க்கை ஒரு திகில் திரைப்படத்தை மிஞ்சும் வகையில் சிக்கலாகி உள்ளது.
கடந்த 2022-ம் ஆண்டு, கொல்கத்தாவைச் சேர்ந்த பிரியாவுக்கும் அர்ஜுனுக்கும் இடையே காதல் மலர்ந்தது. இருவரும் நெருக்கமாக பழகிய போது எடுத்துக் கொண்ட தனிப்பட்ட புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் பின்னர் பெரும் பிரச்சினையாக மாறின. ஆனால் காதலுக்கு குடும்பத்தினர் கடும் எதிர்ப்பு தெரிவித்ததால், பிரியா வேறு ஒருவரான விக்ரமை கடந்த பிப்ரவரி மாதம் திருமணம் செய்து கொண்டார்.
திருமணத்துக்குப் பிறகும் அர்ஜுன் பிரியாவை விடவில்லை. “உன் கணவருக்கு இந்த புகைப்படங்களை அனுப்பி விடுவேன்” என்று மிரட்டினான். மேலும், “ஹனிமூனில் என்னுடன் தனிமையில் இரு, இல்லையெனில் அனைத்தையும் வெளியிடுவேன்” என்று கொடூரமாக மிரட்டினான். திருமண வாழ்க்கை பாழாகிவிடுமோ என்ற பயத்தில் பிரியா பணிந்தார்.
கோவாவுக்கு ஹனிமூன் சென்ற போது, ஹோட்டல் விவரங்களை அர்ஜுனுக்கு தெரிவித்தார். அர்ஜுனும் அதே ஹோட்டலில் அறை எடுத்து தங்கினான். ஹனிமூனில் ஒரு நாள், விக்ரம் கோவாவில் உள்ள உடல்நிலை சரியில்லாத உறவினரைப் பார்த்து வருவதாகவும், நீ அங்கே வர வேண்டாம், இங்கேயே இரு.. இரண்டு மணி நேரத்தில் வந்து விடுவேன் சென்றார்.
இந்த நேரத்தில், பிரியா அர்ஜுனின் அறைக்குச் சென்று அவன் மிரட்டலுக்கு பலியானார். பின்னர் எல்லாம் சரியாகிவிட்டது என்று நினைத்து வீடு திரும்பினார். சில மாதங்களில் பிரியா கர்ப்பமானார் – 7 மாதங்கள் கடந்தன.
திடீரென அர்ஜுன் மீண்டும் தொல்லை கொடுக்க ஆரம்பித்தான். தாங்க முடியாமல் பிரியா அர்ஜுனின் பெற்றோரிடம் சென்று அழுது புலம்பி அனைத்தையும் சொன்னார். அர்ஜுனை கண்டித்த அவரது பெற்றோர், மகனை திட்டினர்.
இதனால் மனமுடைந்த அர்ஜுன், காதல் கால புகைப்படங்கள், கோவா ஹனிமூனில் பிரியா தன்னுடன் இருந்த வீடியோக்கள் உட்பட அனைத்தையும் விக்ரமின் மொபைலுக்கு அனுப்பி விட்டு, தன் அறையில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டான்.
இந்த சம்பவம் வெடித்ததும் கொல்கத்தா முழுவதும் பரபரப்பு ஏற்பட்டது. அர்ஜுனின் பெற்றோர், “எங்கள் மகனின் தற்கொலைக்கு பிரியாதான் காரணம், அவள் மிரட்டியதால் இப்படி நடந்தது” என்று பிரியா மீது போலீசில் புகார் அளித்தனர்.
மறுபுறம், விக்ரம் அதிர்ச்சியடைந்து, “திருமணத்துக்கு முன் காதல் இருந்தது பற்றி கவலையில்லை, ஆனால் ஹனிமூனில் முன்னாள் காதலனுடன் உல்லாசமாக இருந்ததை என்னால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை” என்று கூறி, மனைவி பிரியா மீது துரோகம் மற்றும் ஏமாற்றுதல் புகார் அளித்தார்.
இரு தரப்பு புகார்களால்7 மாத கர்ப்பிணியாக இருந்த பிரியாதிக்குமுக்காடி போனார், “என் கர்ப்பத்திற்கு காரணம் விக்ரம் தான், அர்ஜுன் இல்லை” என்று உறுதியாகக் கூறி, கணவர் மீது வழக்கு தொடர்ந்தார்.
தற்போது பெற்றோர் வீட்டில் தங்கியிருக்கும் பிரியாவின் வாழ்க்கை முற்றிலும் சீர்குலைந்து போயுள்ளது. காதல், மிரட்டல், துரோகம், தற்கொலை, கர்ப்ப சர்ச்சை என சினிமாவை மிஞ்சிய இந்த கொடூர சம்பவம் கொல்கத்தாவில் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.
வழக்கு தொடர்ந்து விசாரணையில் உள்ள நிலையில், உண்மை என்ன என்பது விரைவில் வெளிவரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இது போன்ற சம்பவங்கள் திருமண உறவில் நம்பிக்கையின் முக்கியத்துவத்தை எச்சரிக்கையாக நினைவூட்டுகின்றன!
(பாதிக்கப்பட்டவர்களின் நலன் கருதி பெயர்கள் மாற்றப்பட்டுள்ளன)
