கள்ளகாதலால் 4 குழந்தைகளின் தாய்க்கு நடந்த கொடுமை குறித்த செய்தி இணையத்தில் பரபரப்பி ஏற்படுத்தியுள்ளது.

திண்டிவனம் அடுத்த ஓமந்தூர் பகுதியில் புதுச்சேரி-திண்டிவனம் தேசிய நெடுஞ்சாலை அருகே கடந்த 17-ம் தேதி அதிகாலை 7 மணியளவில் 45 வயது மதிக்கத்தக்க பெண் ஒருவரின் சடலம் கிடந்ததாக அவ்வழியாக சென்றவர்கள் கிளியனூர் காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர்.
சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற கிளியனூர் போலீசார், சடலத்தை கைப்பற்றி உடற்கூறாய்வுக்கு அனுப்பி வைத்தனர். இறந்த பெண்ணின் புகைப்படங்களை வைத்து அருகிலுள்ள கிராமங்களில் விசாரணை நடத்திய போலீசார், யாரும் அடையாளம் காணாத நிலையில், தொழில்நுட்ப உதவியுடன் பெண்ணின் அடையாளத்தை கண்டறிந்தனர்.
இறந்தவர் மயிலாடுதுறை மாவட்டம் மணல்மேடு பகுதியைச் சேர்ந்த மகேஸ்வரி என்பதும், சென்னையில் ஹவுஸ் கீப்பிங் வேலை செய்து வந்ததும் தெரியவந்தது. மகேஸ்வரிக்கு இரு திருமணங்கள் நடந்து நான்கு குழந்தைகள் உள்ளதும் விசாரணையில் தெரியவந்தது.
மகேஸ்வரி கடந்த ஒரு வருடமாக ஒரே ஊரைச் சேர்ந்த லாரி ஓட்டுநர் கண்ணனுடன் தொடர்பில் இருந்ததும், இறுதியாக கண்ணனிடம் போனில் பேசியது தெரியவந்தது.

20 ஆண்டுகளுக்கு முன்பு இருவரும் காதலித்து வந்த நிலையில், மகேஸ்வரி கர்ப்பமானதாகவும், திருமணம் செய்து கொள்ளாமல் பழகியதும் விசாரணையில் வெளியானது.
பின்னர் மகேஸ்வரி இரு திருமணங்கள் செய்து பிரிந்து, குழந்தைகளுடன் சென்னையில் வசித்து வந்தார். ஒரு வருடத்திற்கு முன்பு திருமண விழாவில் சந்தித்து மீண்டும் காதலை புதுப்பித்துக் கொண்ட இருவரும், லாரியில் அடிக்கடி தனிமையில் சந்தித்து உல்லாசமாக இருந்ததாக கூறப்படுகிறது.
மகேஸ்வரி பல ஆண்களுடன் தொடர்பில் இருப்பதாக கண்ணனுக்கு சந்தேகம் ஏற்பட்டது. சமீபத்தில் மகளின் திருமணத்திற்காக பணம் கேட்டதற்கு கண்ணன் மறுத்ததால், தொடர்ந்து தொந்தரவு செய்ததாக கூறப்படுகிறது.

இந்நிலையில், செங்கல்பட்டு அருகே பாடாளம் பகுதியில் லாரியை நிறுத்தி இருவரும் மது அருந்தினர், மதுபோதையில் இருந்த மகேஸ்வரியுடன் உல்லாசமாக இருந்துள்ளார் கண்ணன்.
அப்போது, மகேஸ்வரி மீண்டும் பணம் வேண்டும் என தன்னுடைய ஆசையை வெளிப்படுத்தியுள்ளார். இதனால் கடுப்பான கண்ணன் மகேஸ்வரியுடன் வாக்குவாதத்தில் ஈடுப்பட்டுள்ளார்.

ஒரு கட்டத்தில் வாக்கு வாதம் கைகலாப்பாக மாறி மகேஸ்வரியை கழுத்தை நெரித்து கொலை செய்ததாக கண்ணன் ஒப்புதல் வாக்குமூலம் அளித்துள்ளார்.
பின்னர் அணிந்திருந்த கம்மல், தங்கச் சங்கிலியை பறித்துக்கொண்டு, சடலத்தை ஓமந்தூர் அருகே சாலையோரம் வீசிவிட்டு தப்பியோடியுள்ளான். தலைமறைவாக இருந்த கண்ணனை வானூர் அருகே தனிப்படை போலீசார் கைது செய்தனர்.

கொலை நடந்து 12 மணி நேரத்துக்குள் குற்றவாளியை பிடித்து விசாரணை நடத்தியதாக கோட்டங்குப்பம் டிஎஸ்பி ரூபன்குமார் தெரிவித்தார். கைது செய்யப்பட்ட கண்ணனை வானூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
