பாலிவுட்டில் தன்னுடைய அந்திமக் காலத்தில் இருந்த ஹூமா குரேஷிக்கு தமிழில் காலா மற்றும் வலிமை ஆகிய படங்கள் ஒரு நல்ல அறிமுகமாக இருந்தன. அதனால் தமிழ் ரசிகர்களை வெகுவாகக் கவர்ந்தார்.

முன்னணி பாலிவுட் ஹீரோயினாக இருக்கும் ஹூமா குரேஷி இயக்குனர் அனுராக் காஷ்யப் இயக்கிய கேங்ஸ் ஆஃப் வாசிப்பூர் படத்தின் மூலம் பிரபலம் ஆனார். அதைத் தொடர்ந்து பல வெற்றிப் படங்களில் நடித்த அவர் தனது தனித்துவமான நடிப்புக்காக பாராட்டப்படுபவர். அதையடுத்து பாலிவுட்டில் வித்தியாசமான கதைக்களங்களை தேர்வு செய்து நடித்த அவர் பிரபலம் ஆனார்.

பாலிவுட் நடிகையான ஹூமா குரேஷியை தமிழ் ரசிகர்களுக்கு அறிமுகப்படுத்தியது பா ரஞ்சித்தான். 2018 ஆம் வருடம் பா ரஞ்சித் இயக்கத்தில் SUPER STAR ரஜினிகாந்த் நடித்த காலா படத்தின் மூலமாக் தமிழ் சினிமாவுக்கு அறிமுகமானார். அந்த படத்தில் ரஜினிகாந்துடனான அவரது நடிப்பு வெகுவாகப் பாராட்டப்பட்டது.

ரஜினிகாந்தின் இளமைக் கால காதலியாக, முதுமையில் அவரை சந்திக்கும் ஒரு நபராக நடித்திருந்தார். அதன் பின்னர் ஹெச் வினோத் இயக்கிய வலிமை படத்தில் ஒரு ஆக்ஷன் வேடத்தில் நடித்திருந்தார். தொடர்ந்து நடிப்புக்கு முக்கியத்துவம் உள்ள கதாபாத்திரங்களில் நடித்து கலக்கி வடும் ஹூமா இன்ஸ்டாகிராமில் அவர் வெளியிடும் புகைப்படங்களுக்காகவும் ரசிக்கப்பட்டு வருகிறார்.

கிட்டதட்ட 40 வயதைக் கடந்தாலும், தன்னுடைய வயதுக்கேற்ற துணிச்சலான கதாபாத்திரங்களை ஏற்று நடித்து இன்னமும் தன்னுடைய மார்க்கெட்டை தக்கவைத்துக் கொண்டுள்ளார். இந்நிலையில் இப்போது அவர் கருப்பு நிற உடையணிந்து அவர் வெளியிட்டுள்ள போட்டோக்கள் அவரது ரசிகர்களின் இதயங்களை குளிரச் செய்துள்ளன.

