Posted in

திருமணம் கடந்த உறவால் நடந்த விபரீதம்

திருமணம் கடந்த உறவால் நடந்த விபரீதம் குறித்த செய்தி வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மலேசியாவில் வங்கதேசத்தைச் சேர்ந்த பெண் ஒருவர், தனது காதலன் திருமணமானவர் என்பதை அறிந்த ஆத்திரத்தில் அவரது அந்தரங்க உறுப்பை கத்தியால் வெட்டி தாக்கிய அதிர்ச்சிகரமான சம்பவம் சமூக வலைதளங்களில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

காவல்துறை தகவலின்படி, கைது செய்யப்பட்ட 34 வயது பெண் தஸ்லீமா (பெயர் மாற்றப்பட்டது), தனது காதலன் பூபேஸ் (பெயர் மாற்றப்பட்டது) என்பவருடன் மலேசியாவில் கடந்த சில மாதங்களாக இணைந்து வாழ்ந்து வந்ததாக கூறப்படுகிறது. பூபேஸ், தன்னிடம் ஏற்கனவே திருமணம் ஆனது என்பதை மறைத்து தஸ்லீமாவுடன் உறவு வைத்திருந்தது பின்னர் வெளிச்சத்துக்கு வந்தது.

அக்டோபர் 8 அன்று, தஸ்லீமா காதலனின் திருமண ரகசியத்தை அறிந்ததும், கோபத்தில் பழிவாங்க திட்டமிட்டார். அதே நாளில் இருவரும் வழக்கம்போல் சந்தித்தபோது, “உனக்கு உண்மையிலேயே திருமணம் ஆகிவிட்டதா?” என்று அவர் கேள்வி எழுப்ப, பூபேஸ் அதனை ஒப்புக்கொண்டார். இதற்கு சில நிமிடங்களிலேயே சம்பவம் நடந்தது.

இருவரும் தனியிடத்தில் நெருக்கமாக இருந்தபோது, தஸ்லீமா “இன்று நானே உனக்கு ஆணுறை மாட்டிவிடுகிறேன்” என்று கூறி துணியால் பூபேஸின் கண்களை மூடியுள்ளார். பின்னர் ஹேண்ட்பேக்கில் வைத்திருந்த கூர்மையான கத்தியை எடுத்து அவரது அந்தரங்க உறுப்பை வெட்டி தாக்கி, “என்னைக் காதலிக்கிறாய் என்று சொல்லி மனைவியுடன் ஏமாற்றினாய்!” எனக் கூறி தப்பி ஓடியுள்ளார்.

கடுமையாகக் காயமடைந்த பூபேஸ் உடனடியாக ஆம்புலன்ஸிற்கு தொடர்பு கொண்டார். ரத்த வெள்ளத்தில் துடித்த நிலையில் மருத்துவமனைக்கு அனுப்பப்பட்ட அவர் தற்போது உயிர் பிழைத்துள்ளார். மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் பூபேஸ் கொடுத்த வாக்குமூலத்தின் அடிப்படையில் போலீசார் தஸ்லீமாவை கைது செய்தனர்.

காவல்துறை அதிகாரிகள் தெரிவித்ததாவது: “தஸ்லீமா தற்போது 5 நாட்கள் காவலில் வைக்கப்பட்டுள்ளார். வழக்கு, மலேசிய தண்டனைச் சட்டத்தின் பிரிவு 326 (ஆபத்தான ஆயுதத்தால் கடுமையான காயம் ஏற்படுத்துதல்) மற்றும் குடியேற்றச் சட்டத்தின் பிரிவு 6(1)(c) (சட்டவிரோத நுழைவு) கீழ் விசாரிக்கப்படுகிறது” என்றனர்.

காவல்துறை சம்பவ இடத்தில் இருந்து தாக்குதலில் பயன்படுத்தப்பட்ட கத்தியைப் பறிமுதல் செய்துள்ளது.

இந்தச் சம்பவம் சமூக வலைதளங்களில் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது. சிலர், “திருமணத்தை மறைத்து காதலில் ஈடுபட்ட ஆணுக்கு இது சரியான தண்டனை” எனக் கூற, மற்றொருபக்கம், “ஒரு பெண் இத்தகைய கொடூரத்தைச் செய்வது மன்னிக்க முடியாதது” எனக் கருத்து தெரிவிக்கின்றனர்.

சம்பவத்தைப் பற்றிய விவாதம் மலேசியா மற்றும் வங்கதேச சமூக வட்டாரங்களிலும் தீவிரமாக பரவி வருகிறது. நிபுணர்கள், “தகாத உறவுகள் மற்றும் ஏமாற்றங்களால் உண்டாகும் உணர்ச்சி வெடிப்புகள், மனிதர்களை கடுமையான செயலில் தள்ளுகின்றன. இதைத் தடுப்பதற்காக உணர்ச்சி மேலாண்மை மற்றும் உறவு விழிப்புணர்வு மிகவும் அவசியம்” என எச்சரித்துள்ளனர்.

Discover more from News V Tamil

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading