ஒரே இரவில் மாணவிகளின் வாழ்க்கையை பாழாக்கிய கொடூர சம்பவம் குறித்த செய்தி இணையத்தில் வெளியாகி செம வைரலாக பரவி வருகிறது.

கடந்த மூன்று ஆண்டுகளுக்கு முன்பு சென்னையை நடுங்க வைத்த ஒரு கொடூரத்தின் பின்னணியை பற்றி தான் இந்த பதிவில் பார்க்கப்போகிறோம்.
“ரீல்ஸ் எடுத்தால் பிரபலமாகலாம்… கடற்கரையில் டான்ஸ் ஆடினால் லைக்குகள் பறக்கும்!” என்ற இனிய கனவோடு தொடங்கிய நட்பு… ஒரே இரவில் கொடூர கனவாக மாறியது!
குன்றத்தூர் அனகாபுத்தூர் அரசுப் பள்ளியில் பிளஸ்-1 படிக்கும் 16 வயது மாணவிகள் 5 பேர்… இன்ஸ்டாகிராமில் ரீல்ஸ் போட்டு ரசிகர்களை குவித்து வந்தவர்கள்.
அவர்களது வீடியோக்களுக்கு “ஆகா… ஓகோ…” என கமெண்ட் அடித்துக்கொண்டிருந்தவன் தான் திருவொற்றியூரைச் சேர்ந்த சுரேன் என்கிற அப்பு! கமெண்டில் தொடங்கிய பழக்கம்… விரைவில் செல்போன் நம்பராக மாறியது.
“எங்க ஊர் கடற்கரை சூப்பர் இருக்கு… வந்து ரீல்ஸ் எடுத்தா நீங்க டாப் ஸ்டார்ஸ் ஆகிடுவீங்க!” என்று மூளைச்சலவை செய்த அப்பு… ஐந்து மாணவிகளையும் ஒரே நாளில் திருவொற்றியூருக்கு வரவழைத்தான். கடற்கரையில் மகிழ்ச்சியாக ரீல்ஸ் எடுத்துவிட்டு, மாலை வீடு திரும்பினர்.
அப்போது, மாணவி கீதா (பெயர் மாற்றப்பட்டுள்ளது)-வின் செல்போன் “காணவில்லை”.. திடுக்கிட்ட மாணவிகள் உடனே அப்புவிற்கு செல்போனில் தொடர்பு கொண்டனர். நான் தேடி பாக்குறேன் இருங்க என்று கூறி சற்று நேரத்தில் போனை அழைத்து, போனை கண்டுபிடிச்சிட்டேன்.. இங்கயே வச்சிட்டு போயிட்டீங்க.. “சென்னை சென்ட்ரலில் தான் இருக்கு… , கீதா கூட யாரவது ஒருத்தர் மட்டும் துணைக்கு வாங்க, மத்த மூணு பேரும் வீட்டுக்குப் போயிடுங்க… இல்லேனா லேட்டாகிடும்!” என்று சாதுரியமாகப் பிரித்தான்.
நம்பிக்கையோடு சென்னை சென்ட்ரலுக்கு தன்னுடைய தோழி கிருஷ்ணவேணி (பெயர் மாற்றப்பட்டுள்ளது)-யுடன் வந்த கீதா விடம்… “வந்தாச்சு! முதலில் டின்னர் சாப்பிடலாம்!” என்று ஹோட்டலுக்கு அழைத்துச் சென்றான் அப்பு. அங்கு அறிமுகப்படுத்தினான் தனது நால்வர் கும்பலை – சஞ்சய், டெலிவரி ஏஜென்ட் வினித் (ஏற்கனவே கொலை முயற்சி வழக்கு உள்ளவன்), தொல்காப்பியன், வாணியம்பாடியைச் சேர்ந்த 17 வயது சிறுவன்!
உணவு முடிந்ததும் வந்தது கொடூரத் திட்டம்: “இனிமேல் வீட்டுக்குப் போனா பிரச்சனை ஆகிடும்… இன்று லாட்ஜில் தங்கிடுங்கள். கீதா நீ உங்க அப்பாவுக்கு போன் போட்டு கிருஷ்ணவேணி வீட்டுல தங்குறேன்ன்னு சொல்லு.. கிருஷ்ணவேணி நீ உங்க அப்பாவுக்கு போன் போட்டு நான் கீதா வீட்டுல தங்குறேன்ன்னு சொல்லிடு.. காலையில நேரமா கிளம்பி போயிடுங்க.. என்றது.. இரு மாணவிகளும் “சரி” என்று நம்பி, பெற்றோரிடம் அப்படியே பொய் சொன்னார்கள்.
ஆனால் பெற்றோர் சந்தேகப்பட்டு தோழிகள் வீடுகளுக்குச் சென்றபோது… இருவரும் இல்லை என்பது தெரியவந்தது! பதறிய பெற்றோர் உடனடியாக போலீசில் புகார் அளித்தனர். இதற்குள் மாணவிகளின் போன்களை சுவிட்ச் ஆஃப் செய்துவிட்டு, இருவரையும் வடசென்னை தனியார் லாட்ஜுக்கு அழைத்துச் சென்றது அந்த அப்பு கும்பல்… அங்கு மாறி மாறி இரு மாணவிகளையும் பாலியல் வன்கொடுமை செய்து சீரழித்தார்கள்!
ஒரே இரவில் குழந்தைப் பருவத்தின் கனவுகள் சிதறடிக்கப்பட்டன… போலீசார் செல்போன் சிக்னலை வைத்து லாட்ஜை கண்டுபிடித்து அதிரடியாகச் சுற்றி வளைத்து, இரு மாணவிகளையும் மீட்டனர். அப்பு உள்பட ஐந்து பேரையும் கைது செய்தனர். ஏற்கனவே கொள்ளை வழக்கு உள்ள அப்பு, கொலை முயற்சி வழக்கு உள்ள வினித் உட்பட நால்வர் மீது IPC 366 (பெண் கடத்தல்), போக்ஸோ சட்டம் பிரிவு 8 உள்ளிட்ட பிரிவுகளில் வழக்கு பதிவு செய்த சங்கர் நகர் போலீசார், அவர்களை தாம்பரம் மாஜிஸ்திரேட் அனுபிரியா முன்பு ஆஜர்படுத்தினர்.
நால்வரையும் ஜனவரி 12 வரை சிறையில் அடைக்கவும், 17 வயது சிறுவனை கெல்லீஸ் சிறார் நல விடுதிக்கு அனுப்பவும் உத்தரவானது. இன்ஸ்டாகிராமில் ஒரு கமெண்ட்… ஒரு ரீல்ஸ்… ஒரு நட்பு… ஒரே இரவில் வாழ்க்கையை பாழாக்கிய கொடூரம்!
பெற்றோர்களே எச்சரிக்கை… சமூக வலைதள நட்புகள் எப்போது எதிரியாக மாறும் என்பது யாருக்கும் தெரியாது! இந்த சம்பவம் நம்மை எல்லாம் கண்ணீர் அஞ்சலி செலுத்த வைக்கிறது… இனியாவது குழந்தைகளின் செல்போன் பயன்பாட்டை கண்காணிப்போம்!
