தமிழில் சார்பட்டா பரம்பரை படத்தில் கதாநாயகியாக நடித்து பிரபலமானார் ஹீரோயின் துஷாரா விஜயன்.இவர் 1997 ஆம் வருடம் திண்டுக்கல் மாவட்டத்தில் கன்னியாபுரம் என்ற கிராமத்தில் பிறந்தார் இவர் பள்ளிப்படிப்பை கிராமத்தில் முடித்தார்.பின்னர் ஃபேஷன் டிசைனிங் படிப்பை சென்னையில் முடித்து விட்டு மாடலிங் துறையில் பணியாற்றி வந்தார்.
இவர் தொலைக்காட்சி விளம்பரங்களிலும் மற்றும் ஒரு சில குறும்படங்களிலும் நடித்துள்ளார்.

கடந்த 2019 ஆம் வருடம் போதை ஏறி புத்தி மாறி என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார் துஷாரா. பின்னர் அன்புள்ள கில்லி என்ற படத்தில் நடித்திருந்தார்.

ஆனால் இந்த இரண்டு படங்களும் எதிர்பார்த்த அளவிற்கு வெற்றியை பெறவில்லை.இந்த படங்கள் மூலம் தமிழ் சினிமாவை பற்றி நன்கு கற்று கொண்டேன் என பல பேட்டிகளில் கூறியிருந்தார்.பினனர் பட வாய்ப்புக்காக தேடி வந்தார்.

பின்னர் இவர் ஆர்யாவுடன் இணைந்து சார்பாட்டா பரம்பரை திரைப்படத்தில் நடித்தார்.இந்த MOVIE அமேசான் ஓடிடி தளத்தில் வெளியானது. இந்த படத்தில் மாரியம்மா என்ற கதாபாத்திரத்தில் தைரியமான பெண்ணாக குடும்ப பெண்ணாக நடித்திருந்தார்.இந்த படத்தில் சென்னை பாஷை பேசி நடிப்பில் பின்னி பெடல் எடுத்து இருந்தார். இதன் மூலம் தமிழ் ரசிகர்களின் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றார்.

அடுத்ததாக வசந்தபாலன் இயக்கத்தில் அநீதி படத்தில் நடித்துள்ளார்.இந்த MOVIE வரும் மார்ச்சில் திரைக்கு வர உள்ளது.

இவர் பட வாய்ப்புகளுக்காக போட்டோ ஷூட் நடத்தி போட்டோ களை சமூக வலைதளங்களில் வெளியிட்டு வருகிறார்.

இவர் மாடர்ன் உடையில் கலக்கி வருகிறார்.சமீபத்தில் குட்டியான உடையில் சில போட்டோ களை இன்ஸ்டாகிராமில் வெளியிட்டுள்ளார்.இதை பார்த்த ரசிகர்கள் இவரை வர்ணித்து வருகிறார்கள்.

