மீனின் வயிற்றில் இருந்த விஸ்கி பாட்டில்!!!

வைரல் வீடியோ

மீனவர் ஒருவர் மீனின் வயிற்றிலிருந்து திறக்கப்படாத விஸ்கி பாட்டில் ஒன்றை கண்டெடுத்துள்ளார். இந்த வீடியோவானது சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.

அந்த மீனவர் மீனை வெட்டுகையில், அதன் வயிற்றில் இருந்து எதோ ஒன்று வெளியே வருவதை கண்டார். வெளியே வந்த திறக்கப்படாத விஸ்கி பாட்டிலைக் கண்டு அவர் மிகவும் ஆச்சரியப்பட்டார். மேலும் அந்த வீடியோவை சமூக வலைதளங்களிலும் பகிர்ந்துள்ளார்.

இந்த மீனவர் தினசரி படகில் சென்று மீன் பிடிக்கும் தொழிலை செய்து வந்துள்ளார். எல்லா நாட்களிலும் நினைத்தது போல மீன் கிடைக்காத நிலையில் அன்று அவருக்கு மீனும் அதனுடன் சேர்ந்து ஒரு மது பாட்டிலும் கிடைத்தது அவரை மகிச்சியில் ஆழ்த்தியது.

சம்பவம் நடக்கையில் மற்ற மீனவர்கள் அனைவரும் வலையில் உள்ள மீனை பார்த்துக் கொண்டிருந்தனர். அப்போது ஒரு இளம் மீனவர் தனது கத்தி திறமைகளை காட்டுவதற்காக ஒரு மீனை எடுத்து மேஜையில் வைத்து வெட்ட தொடங்கினார். இதனை மற்றொரு மீனவரை வீடியோ எடுக்க கூறியுள்ளார்.

இந்த வீடியோவானது முதலில் சாதாரணமாக தான் துவங்கியது. ஆனால் அதன் பின் நடந்த சம்பவம் தற்போது உலகம் முழுவதும் பேசும் பொருளாக அமைந்துள்ளது.

அவர் அதனை வெட்டிக்கொண்டிருக்கையில் அதன் வயிற்றுப் பகுதியில் எதோ ஒன்று இருப்பதை கவனித்தார். பிறகு அதனை அனைவரின் முன்பாக வெட்டினார். ஆச்சரிய விதமாக அதனுள் ஒரு கண்ணாடி பாட்டில் இருந்தது. அதனை சரியாக பார்த்த போது அது ஒரு திறக்கப்படாத முழு பாட்டில் விஸ்கி.

இதனை பார்த்த அவர் மகிழ்ச்சியில் ‘ஜாக்பாட்’ என்று சத்தமாக கத்தினார்.
வைரலான அந்த வீடியோ இதோ!!!

இந்த வீடியோவை டிக்டாக் பயனர் ஒருவர் பகிர்ந்த பிறகு, இந்த வீடியோவானது மிகவும் வைரலாக 6 மில்லியன் பார்வைகளை பெற்றது. இருந்தாலும் இந்த வீடியோவானது எங்கு முதலில் எடுக்கப்பட்டது என சரியாக தெரியவில்லை.

வீடியோ வைரலாக ஆனாலும் இந்த சம்பவமானது விவாதத்தை ஏற்படுத்தியது.
ஒரு சிலர் பொறுப்பற்ற மனித நடைத்தைகள் மற்றும் குப்பைகளால் நீர்வாழ் விலங்குகள் தொடர்ந்து அச்சுறுத்தலுக்கு உள்ளாகின்றன என கூறுகின்றனர்.

ஒரு சிலர் புகழுக்காக அவர் வேண்டுமென்றே அந்த பாட்டிலை மீனின் வயிற்றில் செலுத்தியிருக்கலாம் என வாதிக்கின்றனர். மேலும் சிலர் மீனின் வயிற்றில் இருக்கும் என்சய்ம்கள் அதன் லேபிளை அளித்திருக்க வேண்டும். ஏன் அப்படி நடக்கவில்லை என வாதம் புரிகின்றனர்.

இந்த காட்ச்சிகளை உண்மை என நம்பியவர்கள் பலர் கடந்த சில வருடங்களாக பிளாஸ்டிக் பொருட்கள் மற்றும் பிற கழிவுகளை விழுங்கிய பிறகு பல கடல் விலங்குகள் உயிரை இழந்துள்ளன என வருத்தத்தை தெரிவிக்கின்றனர்.

Leave a Reply