ஒரே ஒரு மாணவியுடன் செயல்படும் அரசு பள்ளி!!!

கல்வி

நாகை மாவட்டம் மயிலாடுதுறையில் ஒரே ஒரு மாணவியுடன் அரசு பள்ளி இயங்கி வருகிறது.

இளையாடூரில் உள்ள வடகரையில் அரசு ஒன்றிய தொடக்கப்பள்ளி உள்ளது. இது பெண்களுக்கான பள்ளியாகும். இந்த பள்ளியில் ஒன்றாம் வகுப்பு முதல் ஐந்தாம் வகுப்பு வரை உள்ளது.

இந்த நிலையில் இந்த பள்ளியில் ஒரே ஒரு மாணவி மட்டுமே பயின்று வருகிறார். அவர் இந்த பள்ளியில் இரண்டாம் வகுப்பு படிக்கிறார். அந்த ஊரில் உள்ள மற்ற குழந்தைகள் அனைவரும் தனியார் பள்ளிக்கே செல்கின்றனர்.

இந்த பள்ளியில் ஒரு தலைமை ஆசிரியர் மற்றும் ஐந்து வகுப்புகளுக்கு தேவையான ஆசிரியர்கள் உள்ளனர். மேலும் குடிநீர், கழிப்பறை, விளையாட்டு மைதானம், ஸ்மார்ட் வகுப்பறை என அனைத்து வசதிகளும் உள்ளன.

எத்தனை வசதிகள் இருந்தாலும் வடகரையில் உள்ள அனைத்து பெண் குழந்தைகளும் தனியார் பள்ளிகளுக்கே செல்கின்றனர். இதற்கு காரணம் அரசு பள்ளிகளை குறித்த சரியான விழிப்புணர்வு இல்லாததே என்று ஆசிரியர்கள் குற்றம் சாட்டுகின்றனர்.

இத்தனை வசதிகள் இருந்தாலும் தனியார் பள்ளிகளிலேயே தங்களது குழந்தைகளை சேர்க்க பெற்றோர் விரும்புவதாக கூறுகின்றனர். இதனால் நிறைய அரசு பள்ளிகள் மாணவர்கள் இல்லாமல் மூடும் நிலைமையில் உள்ளது.

இதனைத் தடுக்க அதிகாரிகள் போதுமான நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.

Leave a Reply