கட்டுனா சிம்புவை தான் கட்டுவேன் என பேசிய ஹீரோயின் மருத்துவமனையில் அனுமதி – என்னாச்சு அதிர்ச்சியில் இணையவாசிகள் ??

சினிமா

தமிழ் சின்னத்திரையில் ZEE தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான யாரடி நீ மோகினி உள்ளிட்ட தொடர்களின் நடித்து ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் ஸ்ரீநிதி.
இவர் சமீப காலமாக சமூக வலைதளங்களில் பேசும் விஷயங்கள் தொடர்ச்சியாக வருகின்றன. நட்சத்திரா திருமண வாழ்க்கையில் ஏமாற போகிறார் அவருக்கும் சித்ரா போன்ற நிலைமைதான் வரும் என பேசியிருந்தது சர்ச்சையை ஏற்படுத்தியிருந்தது.

அதேபோல் நடிகர் சிம்புவை காதலித்து வருவதாக அவரைத்தான் கல்யாணம் செய்து கொள்வேன் எங்களை சேர்த்து வையுங்கள் என பேசியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது.

இதையடுத்து நட்சத்திரா ஸ்ரீநிதி மன ரீதியாக பாதிக்கப்பட்டு இருக்கிறார். என்னுடைய திருமண வாழ்க்கையில் எந்த பிரச்சனையும் இல்லை. என்னுடைய முழு சம்மதத்துடன்தான் திருமணம் நடக்க உள்ளது என தெரிவித்திருந்தார்.

இந்த நிலையில் நடிகை ஸ்ரீநிதி புழல் பகுதியில் உள்ள மருத்துவமனை ஒன்றில் கவுன்சிலிங் மற்றும் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு இருப்பதாக நட்பு வட்டாரங்களில் இருந்து தகவல்கள் வெளியாகியுள்ளன.

Leave a Reply