புனித் ராஜ்குமார் மரணத்திற்கு இது தான் காரணமா!!! நடந்தது என்ன???

Follow @ Google News : செய்திகளை உடனுக்குடன் பெற்றிட கூகுள் செய்திகள் பக்கத்தில் News V Tamil இணையதளத்தை ஃபாலோ செய்யுங்கள்.
ஒட்டுமொத்த திரையுலகத்தையும் அதிர்ச்சியில் ஆழ்த்திய சம்பவம் இரண்டு நாட்களுக்கு முன் நடந்தது. என்னவெனில் கன்னட சூப்பர் ஸ்டார் புனித் ராஜ்குமார் மாரடைப்பின் காரணமாக உயிரிழந்தார். இந்த செய்தி அவரது குடும்ப உறுப்பினர்களுக்கும் சரி அவரது கோடான கோடி ரசிகர்களுக்கும் சரி ஒரு மீளா துயரத்தை கொடுத்தது.

உடற்பயிற்சியின் மீது அதிகம் நாட்டம் கொண்ட புனித் ராஜ்குமார் வழக்கம் போல் அவரது வீட்டில் உடற்பயிற்சி செய்து கொண்டிருந்திருக்கிறார். அந்த சமயத்தில் அவருக்கு மாரடைப்பு ஏற்ப்பட்டுள்ளது. தீவிர மாரடைப்பின் காரணமாக பெங்களூரில் உள்ள விக்ரம் மருத்துவமனையில் ICU பிரிவில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை பெற்று வந்தார்.
அனால் சிகிச்சை பலனின்றி புனித் ராஜ்குமார் மரணமடைந்தார். அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார் என்பது தெரிந்ததும் அவரது ரசிகர்கள் மொத்தமாக மருத்துவமனை முன்பு திரண்டனர். அந்த ரசிகர் கூட்டத்தை சமாளிப்பதற்காக மட்டுமே 100க்கும் மேற்ப்பட்ட போலீசார் குவிக்கப்பட்டனர்.

46 வயது மட்டுமே ஆன புனித் ராஜ்குமார் மாரடைப்பின் காரணமாக உயிரிழந்தது அவரது குடும்ப உறுப்பினர்களையும் சரி ஒட்டு மொத்த திரையுலகத்திற்கும் மிக பெரிய அதிர்ச்சியை கொடுத்தது. இந்த செய்தியை கேட்ட அனைத்து கன்னட திரையுலகினர் அனைவரும் தங்களது இரங்கலை தெரிவத்த வண்ணம் உள்ளனர்.
இது மட்டுமல்லாமல் கர்நாடகாவில் 144 தடை உத்தரவும் அமல் படுத்தப்பட்டது. மேலும் அங்கு உள்ள அனைத்து திரையரங்குகளும் மூட உத்தரவு கொடுக்கப்பட்டது.

புனித் ராஜ்குமாருக்கு 1999ல் திருமணம் நடைபெற்றது. இவருக்கு இரண்டு பெண்குழந்தைகள் உள்ளனர். இந்த நிலையில் இவரது பிரிவு அனைவருக்கும் மிக பெரிய சோகத்தை ஏற்ப்படுத்தியுள்ளது.
Follow @ Google News : செய்திகளை உடனுக்குடன் பெற்றிட கூகுள் செய்திகள் பக்கத்தில் News V Tamil இணையதளத்தை ஃபாலோ செய்யுங்கள்.