அமெரிக்காவில் நடைபெறும் பருவநிலை மாற்ற மாநாட்டில் பங்கு கொள்கிறார் சீன அதிபர்

அமெரிக்காவில் நடைபெறும்  பருவநிலை மாற்ற மாநாட்டில் பங்கு கொள்கிறார் சீன அதிபர்

சீன அதிபர் அமெரிக்காவில் நடைபெறும் பருவநிலை மாற்றம் மாநாட்டில் பங்கு கொள்ள இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

அமெரிக்காவின் அதிபர் ஜோ பைடன் பருவ-நிலை மாற்றம் தொடர்பாக சர்வதேச கூட்டத்திற்கு ஏற்பாடு செய்துள்ளார். இந்த கூட்டத்தில் இந்தியா, ரஷ்யா, சீனா உள்ளிட்ட 40 நாடுகளின் தலைவர்கள் காணொலி காட்சி மூலமாக பங்கேற்க உள்ளனர். இந்த உச்சிகூட்டத்தில் அடுத்த வாரம் சீன அதிபர் ஜின்பிங் கலந்து கொண்டு உரையாற்றுவார் என சீன அரசு தெரிவித்துள்ளது.

இம்கூட்டத்தில் பருவ -நிலை மாற்றம் காற்று மாசுபாட்டை குறைக்கும் நடவடிக்கை-களுக்கான நிதியுதவி துாய எரிசக்தி சார்ந்த தொழில்நுட்ப கண்டுபிடிப்புகள் உள்ளிட்ட அம்சங்கள் குறித்து உலகத் தலைவர்கள் விவாதிக்க உள்ளனர். மேலும் இந்த கூட்டத்தில் நிறைவேற்றப்படும் தீர்மானங்கள் வரும் நவம்பரில் நடைபெற உள்ள ஐ.நா.பருவ -நிலை உச்சி கூட்டத்தில் விவாதத்திற்கு எடுத்துக் கொள்ளப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

தொடர்புடைய பதிவுகள்

Leave a Reply