தடுப்பூசி தட்டுப்பாடு தமிழகத்தில் இல்லை – அமைச்சர் விஜயபாஸ்கர்

தடுப்பூசி தட்டுப்பாடு தமிழகத்தில் இல்லை – அமைச்சர் விஜயபாஸ்கர்

தடுப்பூசி தட்டுப்பாடு தமிழகத்தில் இல்லை என்று சுகாதார துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.

இது குறித்து சுகாதாரத்துறை மந்திரி விஜயபாஸ்கர் இன்று பத்திரிகையாளர்கள் சந்திப்பில் கூறியதாவது:-

தமிழகத்தில் தடுப்பூசி தட்டுப்பாடு என்பது இல்லை. கொ ரோ னா தடுப்பூசி வீணாகாமல் தடுக்க நடவடிக்கை எடுக்கப்படுகிறது. தடுப்பு மருந்து வீணாகாமல் தடுப்பூசியை கையாள சுகாதாரப் பணியாளர்களுக்கு அறிவுரை வழங்கியுள்ளோம். வீணாகும் தடுப்பூசியின் அளவை குறைக்க தமிழக அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. தமிழகத்தின் அனைத்து கிராமங்களிலும் தங்கு தடையின்றி தடுப்பூசி கிடைக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

பொதுமக்கள் மிகுந்த ஆர்வமுடன் கொ ரோ னா தடுப்பூசி செலுத்திக்கொள்ள முன்வருகின்றனர். கொ ரோ னா தடுப்பூசி குறித்து மக்களிடையே விழிப்புணர்வு ஏற்பட்டுள்ளது. தமிழக மருத்துவமனைகளில் போதுமான அளவு ஆக்ஸிஜன் இருப்பு உள்ளது.

தமிழகத்தில் அரசு மருத்துவமனை உள்ளிட்ட இடங்களில் ஆக்ஸிஜன் பற்றக்குறை இல்லை. அங்கு 240 டன் ஆக்ஸிஜன் கையாளப்படுகிறது. முகக்கவசம் அணிவது, தனிநபர் இடைவெளியைக் கடைப்பிடிப்பது போன்றவற்றை மக்கள் கட்டாயம் கடைப்பிடிக்க வேண்டும்.

மேலும் 6 லட்சம் கொ ரோ னா தடுப்பூசிகள் தமிழகம் வந்துள்ளன. புனேவிலிருந்து வந்துள்ள கோவிஷீல்டு கொ ரோ னா தடுப்பூசி குறித்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.

தொடர்புடைய பதிவுகள்

Leave a Reply