உச்சக்கட்ட கொண்டாட்டத்தில் சூர்யா குடும்பம்! மகனா இது? பேரழகில் ஜோதிகாவையும் மிஞ்சிய மகள்! காட்டுத் தீயாய் பரவும் போட்டோ

உச்சக்கட்ட கொண்டாட்டத்தில் சூர்யா குடும்பம்! மகனா இது? பேரழகில் ஜோதிகாவையும் மிஞ்சிய மகள்! காட்டுத் தீயாய் பரவும் போட்டோ

தமிழ் சினிமாவில் நட்சத்திர ஜோடியாக வலம் வரும், சூர்யா – ஜோதிகா இருவரும்… புத்தாண்டை குடும்பத்துடன் கொண்டாடிய போட்டோ வெளியாகி தற்போது சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.

சூர்யா – ஜோதிகா ஒன்றாக இணைந்து நடித்த முதல் திரைப்படம் பூவெல்லாம் கேட்டுப்பார். வசந்த் இயக்கத்தில் பஞ்சு அருணாசலம் தயாரிப்பில் 1999ம் ஆண்டு வெளியான இந்த திரைப்படத்தில் இளம் காதல் ஜோடியாக நடித்த சூர்யா – ஜோதிகாவின் நடிப்பு ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது.

கே.ஆர்.ஜெயா எழுதி இயக்கிய “உயிரிலே கலந்தது” படத்தில் இரண்டாவது முறையாக சூர்யாவும் ஜோதிகாவும் ஒன்றாக இணைந்தனர். தேவா இசையில் படத்தில் இடம் பெற்ற பாடல்கள் மட்டுமல்லாது, இருவரது கெமிஸ்ட்ரியும் செம்ம ஹிட்டானது.

சூர்யா – ஜோதிகா ஜோடிக்கு சிகரம் வைத்தது போல் அமைந்த super ஹிட் திரைப்படம் ‘காக்க காக்க’. இந்த படத்தில் என்கவுண்டர் ஸ்பெஷலிஸ்ட்டாக வரும் சூர்யாவும், மாயா டீச்சராக வரும் ஜோதிகாவும் செம்ம ஸ்டைலிஷாக இருந்தது ரசிகர்களை கவர்ந்தது.

சசி சங்கர் இயக்கத்தில் 2004ஆம் வருடம் வெளியான “பேரழகன்” படத்தில் இருவரும் மாறுபட்ட இரண்டு கதாபாத்திரங்களில் நடித்தனர். சூர்யா – ஜோதிகா நடிப்பு திறமைக்கு தீனி போடும் படமாக “பேரழகன்” அமைந்தது.

இறுதியாக இந்த super ஜோடி அசத்தியது ஜில்லுன்னு ஒரு காதல் திரைப்படம். 2006ம் ஆண்டு இந்த படம் வெளியான இரண்டு நாட்களிலேயே சூர்யாவும் ஜோதிகாவும் திருமணம் செய்துகொண்டனர்.
அதன் பின்னர் சினிமாவில் நடிக்காமல் இருந்த ஜோதிகா மகனும், மகளும் பெரியவர்களாகி விட்டதால் தற்போது மீண்டும் நடிக்க ஆரம்பித்துள்ளார். ஹீரோயினுக்கு முக்கியத்துவம் வாய்ந்த க தா பாத் திர த்தி ல் ஜோதிகா நடித்து வருகிறார்.


திருமணத்திற்கு பிறகும், காதல் குறையாத தம்பதிகளாக வலம் வரும் இவர்கள், எந்த விசேஷம் என்றாலும் அதனை தங்களுடைய குடும்பத்துடன் கொண்டாடி வருகிறார்கள்.

அந்த வகையில் தற்போது, கிறிஸ்துமஸ், மற்றும் புத்தாண்டை ஜோதிகாவின் குடும்பத்தினருடன் இவர்கள் கொண்டாடிய போட்டோ social மீடியாவில் வைரலாக பார்க்கப்பட்டு வருகிறது.

இது தான் நேற்று இரவு சூர்யா – ஜோதிகா இருவரும் இந்த வருட புத்தாண்டை வற்றவேற்ற புகைப்படம்.

தொடர்புடைய பதிவுகள்

Leave a Reply