சாண்டியின் முன்னாள் மனைவிக்கு இப்படி ஒரு நிலைமையா? ரசிகர்களை சோகத்தில் ஆழ்த்திய பதிவு!!

சாண்டியின் முன்னாள் மனைவிக்கு இப்படி ஒரு நிலைமையா? ரசிகர்களை சோகத்தில் ஆழ்த்திய பதிவு!!

காஜல் பசுபதி..

மானாட மயிலாட நிகழ்ச்சி மூலம் பிரபலம் ஆனவர் சாண்டி. தற்போது தமிழ் சினிமாவில் முன்னணி நடன இயக்குனராக வலம் வரும் இவர்,

நடிகை காஜல் பசுபதியை முதலாவதாக கல்யாணம் செய்துகொண்டு, பின்னர் விவாகரத்து செய்து பிரிந்தார்.

இந்த விவாகரத்து முடிவுக்கு நான் தான் காரணம் சாண்டி மீது எந்த தவறும் இல்லை என காஜல் கூறி இருந்தார். இதனிடையே,

சாண்டியை விவாகரத்து செய்த பிறகும் கூட அவருடனும் அவரது குடும்பத்துடனும் நல்ல நட்பை காஜல் பசுபதி தொடர்ந்து வருகிறார்.

சமூக வலைதளங்களில் ஆக்டிவாக உள்ள காஜல் பசுபதி அவ்வப்போது தனது சமூக வலைதள பக்கத்தில் தைரியமாக கருத்துக்களை பதிவு செய்வார். அந்தவகையில், தற்ப்போது இயக்குனர் ஒருவர் சம்பளம் கொடுக்காமல் வம்பிழுப்பதாக கூறி பதிவிட்டுள்ளார்.

அந்த பதிவில் அவர் கூறியிருப்பதாவது, ” படத்தில் நடித்துவிட்டு சம்பள பணம் கேட்டால் படுக்க வா என்று இயக்குனர் கூப்பிடுகிறார்.

அதுமட்டும் அல்லாமல் நான் குடித்துவிட்டு கலாட்டா பண்ணேன்னு பொய் சொல்லி என் சினிமா கெரியரையே காலி பண்ணலாம்னு திட்டம் போடுறாங்க என பெயர் குறிப்பிடாமல் இயக்குனர் ஒருவரை ஆபாசமான வார்த்தைகளால் திட்டி பதிவிட்டிருக்கிறார். ” இந்த பதிவு சமூகவலைத்தளங்களில் கிடுகிடுவென வைரலாகி வருகிறது.

தொடர்புடைய பதிவுகள்

Leave a Reply