யம்மாடியோ இப்படி ஒரு நிலைமையா !!மியோசிடிஸ் நோய் பற்றி உணர்ச்சிகரமாக பேசிய சமந்தாவின் வீடியோ வைரல்.

மியோசிடிஸ் நோய் பற்றி உணர்ச்சிகரமாக பேசிய சமந்தாவின் VIDEO வைரல்.
தென்னிந்திய திரை உலகில் பிரபல முன்னணி ஹீரோயின் யாக வலம் வருபவர் சமந்தா. இவர் தற்போது இயக்குனர் ஹரிஷ் இயக்கத்தில் உருவாகி இருக்கும் யசோதா திரைப்படத்தில் நடித்திருக்கிறார்.

இப்படம் வரும் NOV 11ஆம் தேதி தமிழ், தெலுங்கு, மலையாளம், ஹிந்தி மற்றும் கன்னட மொழியில் ஒரு பான் இந்தியா படமாக வெளியாக உள்ளது.இந்நிலையில் சமந்தா சமீபத்தில் தனது ட்விட்டர் பக்கத்தில் தான் மியோசிடிஸ் என்ற ஆட்டோ இம்யூன் நோயால் பாதிக்கப்பட்டிருப்பதாக தகவலை வெளியிட்டு ரசிகர்களுக்கு அதிர்ச்சி கொடுத்திருந்தார்.

இதுகுறித்து ரசிகர்களும் திரை பிரபலங்களும் ஹீரோயின் சமந்தாவுக்கு ஆறுதல் தெரிவித்து வந்ததை தொடர்ந்து தற்போது ஹீரோயின் சமந்தா இந்த நோய் குறித்து அண்மையில் எடுக்கப்பட்ட நேர்காணலில் உணர்ச்சிப்பூர்வமாக கண்கலங்கி பேசியுள்ள VIDEO இணையத்தில் வைரலாகி வருகிறது.

அதில் அவர், அந்த நோயை எதிர்கொண்ட விதம் குறித்து பேசுகையில் கண் கலங்கினார். இந்த நோயால் பாதிக்கப்பட்டவுடன் அடுத்தது என்ன என்று தெரியாமல் ஓர்அடி கூட எடுத்து வைக்க முடியாமல் தடுமாறியதாக கூறியிருக்கிறார், இதை அணுக வேண்டிய விதத்தை புரிந்து கொண்டு தற்போது நலமாக இருப்பதாகவும் பேட்டியில் உணர்வுபூர்வமாக கூறியுள்ளார். இந்த VIDEO சமூக வலைத்தளங்களில் ட்ரெண்டிங் ஆகி வருகிறது.