ஏமாற்றத்துடன் சிவகாமி ஊருக்கு கிளம்ப சந்தியா அதிரடி முடிவு ஒன்றை எடுத்துள்ளார்.

தமிழ் சின்னத்திரையில் VIJAY டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான தொடர் RAJA RANI 2. இன்றைய எபிசோடில் சந்தியா சோகமாக இருக்க சிவகாமி ஏமாற்றத்துடன் ஊருக்கு கிளம்பி செல்கிறார். இந்த பக்கம் அர்ச்சனா ஆரத்தி தட்டுடன் காத்துக் கொண்டிருக்க சந்தியா இல்லாமல் ஆட்டோவில் வந்து இறங்குவதை பார்த்து சந்தியா எங்கே என கேட்க உள்ளே போனதும் அவள் கர்ப்பமாக இல்லை என்ற விஷயத்தை சொல்ல அர்ச்சனா உட்பட எல்லோரும் அதிர்ச்சி அடைகின்றனர்.

சந்தியாவைப் பற்றிய எல்லோரும் பேசிக் கொண்டிருக்க சரவணன் வருத்தத்தோடு எழுந்து உள்ளே சென்று விட சிவகாமி இனி இதைப்பற்றி பேச வேண்டாம் என சொல்லி அழுது கொண்டே உள்ளே சென்று விடுகிறார். இந்த பக்கம் காலையில் எழுந்ததும் சந்தியா சரவணன் சொன்ன வார்த்தைகளை மனதில் வைத்துக் கொண்டு பார்வதி வாங்கி கொடுத்த டிரஸ், சரவணன் வாங்கி கொடுத்த ஷூவை போட்டுக்கொண்டு கடுமையான பயிற்சியில் ஈடுபடுகிறார்.

அடுத்ததாக ரூமில் சரவணன் சந்தியாவுடனான நினைவுகளை நினைத்துப் பார்த்துக் கொண்டிருக்க பிறகு சரவணன் சந்தியாவுக்கு போன் போட்டு பேசுகிறார். எல்லோரும் நார்மல் ஆயிட்டாங்களா என சந்தியா கேட்க இல்ல எல்லாரும் வருத்தப்பட்டார்கள் என சொல்ல என்னால தான் என சந்தியா வருத்தப்படுகிறார். இப்படி இருவரும் பேசிக் கொண்டிருப்பதோடு இன்றைய எபிசோடு முடிவடைகிறது.

அடுத்து வெளியான ப்ரோமோ வீடியோவில் வழக்கம் போல சந்தியாவை ஏளனமாக பேசி அந்த கோப்பை எனக்குத்தான் என சவால் விடுகிறார்.