மொத்த குடும்பத்துக்கும் ஹேமா அதிர்ச்சி கொடுக்க விழி பிதுங்கி நிற்கிறார் பாரதி இன்றய எபிசோடு 19/10/2022

தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பி ர பல மா ன தொடர் பாரதி கண்ணம்மா. இன்றைய எபிசோடில் ஷர்மிளா பாரதி வீட்டுக்கு வந்து வெண்பா ரோஹித் கல்யாணத்துக்காக பத்திரிக்கை கொடுக்க அந்த விஷயம் கேட்டு பாரதி அதிர்ச்சி அடைகிறார். உடனடியாக வெண்பாவுக்கு போன் போட்டு பத்திரிகை கொடுத்த விஷயத்தை சொல்ல அதைப்பற்றி எல்லாம் நீ எதுக்கு கவலைப்படுற பத்திரிக்கை கொடுக்கட்டும் அந்த கால் நடட்டும் ஆனால் என் கழுத்துல தாலி கட்ட வேண்டியது யார் என்பதை முடிவு செய்ய வேண்டியது நான் தான்.

சொன்னபடி சொன்ன தேதியில் நமக்கு திருமணம் நடக்கும் நீ என் கழுத்துல தாலி கட்டினால் மட்டும் போதும் அடுத்து வர பிரச்சனையை நான் பார்த்துக்கிறேன் என வெண்பா சொல்லி ஃபோனை வைக்கிறார். பிறகு கண்ணம்மா ரோட்டில் நடந்து வர வெண்பா திடீரென காரில் இருந்து இறங்கி அதிர்ச்சி கொடுத்து கண்ணம்மாவிடம் தன்னுடைய கல்யாணத்திற்கு கட்டாயம் வர வேண்டும் என சொல்லி பத்திரிக்கை கொடுக்கிறார். வெண்பாவோட கேரக்டர் இது கிடையாதே ஏதோ திட்டம் வச்சிருக்கா என கண்ணம்மாவுக்கு சந்தேகம் வருகிறது.

அடுத்து வீட்டில் எல்லோரும் அமர்ந்து பேசிக் கொண்டிருக்க அப்போது ஹேமா பாரதி அம்மா என வரைந்து கொடுத்த போட்டோவை எடுத்து வந்து உட்காருகிறார். எல்லோரும் ஹேமாவிடம் பேசிக் கொடுக்க அவர் படிக்கட்டையே பார்த்துக் கொண்டிருக்க கொஞ்ச நேரத்தில் ஹேமா காப்பாற்றிய பாட்டி வீட்டுக்கு வர அவரை உள்ளே அழைத்து வருகிறார். பிறகு ஹேமா அவரிடம் இவர்கள் எல்லாரையும் உங்களுக்கு யாருன்னு தெரியுதா எனக்கு கேட்க அவர் தெரியலையே என கூறுகிறார்.

பின்னர் இவரையாவது தெரியுதா என பாரதியை காட்டிக் கேட்க அதுவும் தெரியவில்லை என சொல்ல ஹேமாவிடம் யார் இவங்க? எதுக்காக கூட்டி வந்தாய் என கேட்க பிறகு அவர் ஹேமா தன்னை காப்பாற்றிய விஷயத்தை கூறுகிறார். அவதான் உங்க காரனுக்கு என்னை கூட்டிட்டு வர சொல்லி இருக்கா ஏதோ முக்கியமான விஷயம் பேசணும்னு சொன்னா என சொல்ல என்ன ஹேமா அது என கேட்கின்றனர்.
பிறகு அந்த போட்டோவை எடுத்துக் கொடுக்க அவர் போட்டோவை பார்த்து ஹேமா என கண்கலங்க அனைவரும் அதிர்ச்சி அடைகின்றனர். பாரதி விழி பிதுங்கி நிற்கிறார். இத்துடன் இன்றைய பாரதி கண்ணம்மா தொடர் எபிசோட் முடிவடைகிறது.