நடிகை நயன்தாரா நடிப்புக்கு முழுக்கு போட இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.

நடிகை நயன்தாரா நடிப்புக்கு முழுக்கு போட இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.

தென்னிந்திய சினிமாவின் லேடிஸ் SUPER ஸ்டாராக வலம் வருபவர் நடிகை நயன்தாரா. தமிழ் தெலுங்கு மலையாளம் மூவி பல்வேறு மொழிகளின் அடித்து வரும் இவர் அஜித், விஜய், சூர்யா, ரஜினி, தனுஷ் என பல நடிகர்களுக்கு ஜோடியாக பல்வேறு படங்களில் நடித்துள்ளார்.

இயக்குனர் விக்னேஷ் சிவனை காதலித்து வந்த நயன்தாரா சில மாதங்களுக்கு முன்னர் அவரை கல்யாணம் செய்து கொண்டார். திருமணத்துக்குப் பிறகு சில படங்களில் நடித்து வரும் இவர் குறிப்பாக அட்லி இயக்கத்தில் ஷாருக்கான் நடிப்பில் உருவாகி வரும் ஜவான் படத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார்.இந்த படத்தை தொடர்ந்து ஒப்பந்தமாகியுள்ள 4 படங்களில் நடிக்க உள்ளார்.

அதன் பிறகு படங்களில் நடிப்பதை முழுமையாக நிறுத்தி விட முடிவெடுத்து இருப்பதாக சொல்லப்படுகிறது. பட தயாரிப்பு மற்றும் தன்னுடைய சொந்த பிசினஸில் கவனம் செலுத்த இருப்பதாகவும் அதற்காகவே இப்படி ஒரு முடிவு எடுக்கப்பட்டதாக சமூக வலைதளங்களில் தகவல்கள் வெளியாகி ரசிகர்களை அதிர்ச்சி அடைய செய்துள்ளது.

தொடர்புடைய பதிவுகள்

Leave a Reply