பிரபுதேவா வட மாநில மருத்துவர் ஒருவரை திருமணம் செய்து கொண்டு ரகசியமாக வாழ்ந்து வருவதாக தகவல் வெளியாகி உள்ளது.

தமிழ் சினிமாவில் ஹீரோ , டான்ஸ் மாஸ்டர், இயக்குனர் என பன்முக திறமைகளுடன் வலம் வருபவர் பிரபுதேவா. தமிழ், தெலுங்கு, ஹிந்தி உள்ளிட்ட மொழி படங்களை இவர் இயக்கியுள்ளார்.

கோலிவுட் முதல் பாலிவுட் சினிமா வரை பல்வேறு படங்களில் டான்ஸ் மாஸ்டராக பணியாற்றி வ ரு கி றா ர்.இவருடைய மனைவியுடன் பிரச்சனை ஏற்பட்டு இருவரும் பிரிந்த நிலையில் பிரபல நடிகையை கல்யாணம் செய்யப் போவதாக தகவல் வெளியானது. கல்யாணம் வரை சென்ற இந்த காதல் திடீரென பிரேக்கப்பில் முடிந்தது.

இந்த நிலையில் ஹீரோ பிரபுதேவா கொரோனா காலத்தில் பீகாரை சார்ந்த டாக்டர் ஹிமானி சிங் என்பவருடன் காதல் ஏற்பட்டு அவரை ரகசியமாக கல்யாணம் செய்து கொண்டு வாழ்ந்து வருவதாக பிரபலங்களுக்கு கவுன்சிலிங் அளிக்கும் மருத்துவர் ஜெயந்தி கண்ணப்பன் பேட்டி ஒன்றில் தெரிவித்துள்ளார்.