ஒரே நாளில் இரண்டு டோஸ் கொரோனா தடுப்பூசி போடப்பட்ட அந்த காலத்து ஸ்டீல் பாடி 70 வயது மூதாட்டி!!! சுகாதாரத்துறை அலுவலர்கள் அலட்சியம்…

ஒரே நாளில் இரண்டு டோஸ் கொரோனா தடுப்பூசி போடப்பட்ட அந்த காலத்து ஸ்டீல் பாடி 70 வயது மூதாட்டி!!! சுகாதாரத்துறை அலுவலர்கள் அலட்சியம்…

வேதாரண்யம் அருகே சுகாதாரத்துறை அலுவலர்களின் அல்ட்சியத்தால் ஒரே நாளில் இரண்டு டோஸ் கொரோனா தடுப்பூசி செலுத்திக்கொண்ட மூதாட்டியின் உடலில் எந்த பாதிப்பும் இல்லாத நிலையில் மருத்துவமனையில் இருந்து அவர் வீடு திரும்ப உள்ளார்.

நாகை மாவட்டம் வேதாரண்யத்தை அடுத்த வண்டுவாஞ்சேரியை சேர்ந்த நாகப்பன் என்பவரின் மனைவி அலமேலு ஆவார். இவருக்கு வயது 70. இவர் விவசாயக் கூலித்தொழிலாளியாகயாக உள்ளார்.

இவர் அந்தப் பகுதியில் உள்ள கொரோனா தடுப்பூசி மையத்திற்கு தடுப்பூசி செலுத்துவதற்காக சென்றுள்ளார். அங்கு மூதாட்டி அலமேலு அறையின் முன் உள்ள அலுவலரிடம் தனது ஆதார் அட்டையை காட்டி தடுப்பூசி செலுத்த பதிவு செய்து கொண்டார். பின் கோவிஷீல்ட் தடுப்பூசியையும் செலுத்திக் கொண்டார்.

அதன் பின் அவர் ஒரு மரத்தடியில் அமர்ந்துள்ளார். அதே நேரத்தில் மற்றொரு அறையிலும் தடுப்பூசி செலுத்தும் பணி நடைபெற்று வந்துள்ளது. அங்கு ஆண்கள் வரிசையில் கூட்டம் குறைவாக இருந்துள்ளது. எனவே அந்த வரிசையில் பெண்களும் அனுப்பப்பட்டு ஊசி செலுத்தப்பட்டனர்.

இந்நிலையில் ஊசி செலுத்தப்பட்டு மரத்தடியில் அமர்ந்திருந்த அலமேலுவை சிலர் மீண்டும் ஊசி செலுத்த வரிசையில் நின்றவர்களிடத்தில் நிற்க வைத்துள்ளனர். விவரம் தெரியாமல் மீண்டும் வரிசையில் சென்ற மூதாட்டி அலமேலு மீண்டும் தனது ஆதார் அட்டையை கொடுத்து பதிவு செய்து விட்டு இரண்டாவது முறையாக கோவிஷீல்ட் தடுப்பூசியை போட்டுக் கொண்டு வீடு திரும்பியுள்ளார்.

மாலையில் தடுப்பூசி போட்டுக் கொண்டவர்களின் பெயர், ஆதார் போன்ற விவரங்களை கணினியில் பதிவேற்றிய போது அலமேலுவிற்கு இரண்டு டோஸ் தடுப்பூசி ஒரே நாளில் செலுத்தப்பட்டது கண்டுபிடிக்கப்பட்டது.

இதனை கண்டு அதிர்ச்சி அடைந்த சுகாதாரத் துறையினர் மூதாட்டி அலமேலுவின் வீட்டிற்க்கு சென்று அவரை அழைத்து சென்று வேதாரண்யம் அரசு மருத்துவமனையில் சேர்த்து கண்காணித்தனர். மருத்துவமனையில் தொடர்ந்து இரண்டு நாட்களாக கண்காணிப்பில் வைக்கப் பட்டிருந்த அலமேலு நல்ல உடல் நலத்துடன் உள்ளார்.

இதனை தொடர்ந்து மருத்துவமனையில் இருந்து அவர் விரைவில் வீடு திரும்புவார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய பதிவுகள்

Leave a Reply