சுடுகாட்டில் 10,000 குடுத்து மனித எலும்பு கூட்டினை வாங்கிய மருத்துவ மாணவி!! காரணம் இதோ…

சென்னை சாஸ்திரி நகரில் குப்பைத்தொட்டியில் மனித எலும்புக் கூடு கிடந்த வழக்கில் மருத்துவ மாணவியை போலீசார் விசாரணைக்கு அழைத்துள்ளனர்.
சென்னை அடையாறு சாஸ்திரி நகரில் கடந்த 23 ம் தேதி அன்று அதிகாலையில் மாநகாரட்சி தூய்மைப் பணியாளர் ஒருவர் குப்பைத் தொட்டியை சுத்தம் செய்ய சென்ற போது ஒரு பையில் எலும்புக்கூடு இருந்ததைக் கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

இது குறித்து உடனடியாக சாஸ்திரி நகர் போலீசாருக்கு அவர் புகார் அளித்தார். புகாரின் பேரில் சாஸ்திரி நகர் போலீசார் தலை, கால், கை என தனித்தனியாக இருந்த எலும்புக்கூடினை கைப்பற்றி தடயவியல் ஆய்வகத்திற்கும், ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கும் அனுப்பி வைத்தனர்.
மேலும் சந்தேக மரணம் என போலீசார் வழக்கு பதிவு செய்து எலும்புக்கூடு ஆனா பெண்ணா என அறிய DNA பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் கொலை செய்து பல வருடங்கள் கழித்து எலும்புக்கூட்டினை குப்பையில் வீசிச் சென்றனரா என பல கோணங்களில் விசாரணை மேற்கொண்டனர்.

இந்நிலையில் காவலாளி ஒருவர் அந்த பையை குப்பையில் வீசிச் செல்வது சிசிடிவி கேமராவில் பதிவாகி இருந்தது. இதனையடுத்து அந்த காவலாளியான பார்த்த சாரதியை கண்டறிந்து போலீசார் விசாரணை செய்தனர்.
விசாரணையில் அவர் முதலாளியின் காரை சுத்தம் செய்யும் பொழுது கிடைத்த பையை குப்பையில் போட்டதாக கூறினார். இதனையடுத்து வீட்டின் உரிமையாளரை விசாரித்த போது தனது காரை தன் நண்பருக்கு கொடுத்ததாகவும் அதனை அவர் மகள் பயன்படுத்தியதாகவும் கூறினார்.
தொடர்ந்து அந்த பெண்ணை போலீசார் விசாரித்த நிலையில் அவர் மருத்துவம் படித்து வருவதாகவும், படிப்பிற்காக 10 ஆயிரம் கொடுத்து சுடுகாட்டில் எலும்புக்கூடு வாங்கியதாகவும் மேலும் அதனை காரில் மறந்து வைத்து விட்டதாகவும் தெரிவித்தார்.

மருத்துவ மாணவி யாரிடம் எலும்புக்கூட்டினை வாங்கினார்? வாங்கினது உண்மை தானா? என போலீசார் விசாரித்து வருகின்றனர்.