ரோட்டில் சிதறிய 500 ருபாய் நோட்டுகள்!!! அள்ளிச் சென்ற பொது மக்கள்…

சாலையில் சிதறிக் கிடந்த 500 ருபாய் நோட்டுகளை அள்ளி செல்ல முயன்ற பொது மக்களிடமிருந்து அரசு பேருந்து ஓட்டுனர் பணத்தை மீட்டு பாபநாசம் காவல் நிலையத்தில் ஒப்படைத்தார்.

தஞ்சாவூர்- கும்பகோணம் தேசிய நெடுஞ்சாலையில் திருப்பாலத்துறை மெயின் ரோடு பகுதியில் நடுரோட்டில் கட்டுகட்டாக 500 ருபாய் நோட்டுகள் சிதறி கிடந்தன.

உடனே அப்பகுதியில் சென்ற இரு சக்கர வாகன ஓட்டிகளும் பொதுமக்களும் காற்றில் பறந்து வந்த 500 ருபாய் நோட்டுகளை பார்த்தவுடன் அதனை எடுத்து சென்றுள்ளனர். அப்பொழுது அந்த வழியாக வந்த அரசு பேருந்து ஓட்டுனர் 500 ருபாய் நோட்டுகளை மீட்டு பாபநாசம் காவல் நிலையத்தில் ஒப்படைத்தார்.
இந்த நிலையில் வீட்டு பத்திரத்தை அடமானம் வைத்து 3 1/2 லட்சம் ரூபாயை கொண்டு வரும் வழியில் கீழே விழுந்ததாக கும்பகோணத்தை சேர்ந்த சூர்யா என்பவர் புகார் அளித்துள்ளார்.
இதனையடுத்து காவல் துறையினர் சூர்யாவிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.