தி. மு.க எம்.எல்.ஏ மகன் உட்பட 7 பேர் கார் விபத்தில் பலி!!! பெங்களூர் அருகே நிகழந்த கோர விபத்து…

தி. மு.க எம்.எல்.ஏ மகன் உட்பட 7 பேர் கார் விபத்தில் பலி!!! பெங்களூர் அருகே நிகழந்த கோர விபத்து…

பெங்களூர் அருகே நடந்த விபத்தில் ஓசூர் தொகுதியின் தி.மு.க சட்ட மன்ற உறுப்பினர் பிரகாஷின் மகன் உட்பட 7 பேர் உயிரிழந்தனர். இந்த விபத்து தொடர்பான சிசிடிவி காட்சிகள் வெளியாகி உள்ளன.

பெங்களூர் அருகே கோரமங்கலம் பகுதியில் நள்ளிரவில் மிகவும் விலை உயர்ந்த பாதுகாப்பான ஆடி கார் ஒன்று மிக அதிவேகமாக சென்றுள்ளது. அது ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்து தாறுமாறாக ஓடி உள்ளது. பிறகு சாலை ஓரம் உள்ள தடுப்பு சுவரில் மோதி அங்குள்ள கட்டிடத்தின் மீது இடித்து பயங்கர விபத்திற்கு உள்ளாகி உள்ளது.

இந்த கார் அதி வேகமாக சத்தத்துடன்மோதியதால் அருகில் உள்ள மக்கள் வந்து பார்த்துள்ளனர். அப்போது அந்த காரில் புகை வர ஆரம்பித்துள்ளது. இதனையடுத்து அருகில் உள்ளோர் தண்ணீரை ஊற்றி புகையை அணைக்க முயர்ச்சித்துள்ளனர்.

இந்நிலையில் சம்பவ இடத்திலேயே 6 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் ஒருவர் மருத்துவமனைக்கு அழைத்து செல்லும் வழியில் உயிரிழந்துள்ளார்.

விபத்து குறித்து தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து நடத்திய முதல் கட்ட விசாரணையில் ஓசூர் தி.மு.க சட்ட மன்ற உறுப்பினர் பிரகாஷின் மகன் உட்பட 7 பேர் விபத்தில் சிக்கியது தெரிய வந்துள்ளது. இவர்கள் தமிழ்நாடு, கேரளா, ஹரியானா, கர்நாடகா பகுதியை சேர்ந்தவர்கள் என்பதும் தெரிய வந்துள்ளது.

மேலும் இந்த காரில் பயணம் செய்த 7 பேருமே சீட் பெல்ட் அணியாமல் இருந்ததால் ஏர் பேக் வேலை செய்யவில்லை என்பதும் தெரிய வந்துள்ளது.
தொடர்ந்து இது குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இந்த நிலையில் எம்.எல்.ஏ வின் மனைவி கடந்த சில நாட்களுக்கு முன்னர் உயிரிழந்ததை அடுத்து தற்போது அவரது மகனும் சாலை விபத்தில் உயிரிழந்தது பெரும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

தொடர்புடைய பதிவுகள்

Leave a Reply