திருச்சியில் ஓடுகின்ற காரில் கொழுந்து விட்டு எரிந்த தீ… சம்பவ இடத்திலேயே ஓட்டுனர் உடல் கருகி பலி!!!

திருச்சியில் ஓடுகின்ற காரில் கொழுந்து விட்டு எரிந்த தீ… சம்பவ இடத்திலேயே ஓட்டுனர் உடல் கருகி பலி!!!

திருச்சி அருகில் ஓடுகின்ற காரில் திடீரென மள மளவென தீப்பற்றி எரிந்ததால் காரில் இருந்து தப்பிக்க முடியாமல் ஓட்டுனர் சம்பவ இடத்திலேயே உயிர் இழந்த பரிதாபம் நிகழ்ந்துள்ளது.

நேற்று அதிகாலை திருச்சி மாவட்டத்திலுள்ள, மணப்பாறைக்கு அருகில் உள்ள சித்தானந்தம் பிரிவு என்ற இடத்தில் திண்டுக்கல் – திருச்சி நெடுஞ்சாலையில் சாலையில் உள்ள டிவைடரில் இடித்தவாறு கார் ஒன்று மள மளவென எரிந்து கொண்டிருந்தது.

அதனைப் பார்த்த சாலையோரமாக சென்ற பொதுமக்கள் வேகமாக சென்று தீயை அணைக்க முற்ப்படனர். தீயை அணைக்கும் போது காரின் ஓட்டுனர் சீட்டில் ஒருவர் கருகிய நிலையில் அமர்ந்திருப்பதைப் பார்த்து அதிர்ச்சி அடைந்து மணப்பாறை காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர்.

காவல் துறையினர் வருவதற்கு முன் கார் முழுவதும் எரிந்து நாசமானது.மேலும் காரின் உள்ளே இருந்தவரும் உடல் கருகி பலியானார்.

இதனால் நெடுஞ்சாலை முழுவதும் புகைமூட்டமாக காட்சி அளித்தது. அதன் பின்னர் வந்த தீ அணைப்பு துறையினர் எரிந்து கொண்டிருந்த தீயை அணைத்தனர்.

தீயில் உடல் கருகி உயிர் இழந்த நபரின் உடலை மீட்ட மணப்பாறை காவல் துறையினர் பிரேத பரிசோதனைக்காக மணப்பாறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் மணப்பாறை போலீசார் இது விபத்தா அல்லது திட்டமிட்டு நடைபெற்ற கொலையா என வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.

மேலும் அடையாளம் தெரியாத வகையில் இறந்தவர் யார் என்பது குறித்தும் போலீசார் விசாரித்து வருகின்றனர். தடயவியல் நிபுணர்கள் சம்பவ இடத்தில் சோதனை நடத்தி வருகின்றனர்.

இந்த சம்பவம் காரணமாக திண்டுக்கல்- திருச்சி நெடுஞ்சாலையில் போக்குவரத்துக்கு நெரிசல் ஏற்ப்பட்டது. அதிகாலையில் நடந்த இந்த தீ விபத்து அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்ப்படுத்தியுள்ளது.

தொடர்புடைய பதிவுகள்

Leave a Reply