ஹைதியில் ஏற்பட்ட நிலநடுக்கத்தினால் ஏற்பட்ட உயிர் பலிகளின் எண்ணிக்கை 2000ஐ தொட்டது… கடும் மழையால் தொய்வு நிலையில் தவிக்கும் மீட்பு குழு ..!!

ஹைதியில் ஏற்பட்ட  நிலநடுக்கத்தினால்  ஏற்பட்ட உயிர்  பலிகளின்  எண்ணிக்கை 2000ஐ தொட்டது… கடும் மழையால் தொய்வு நிலையில் தவிக்கும் மீட்பு குழு  ..!!

கரிபீயன் தீவில் ஹைதியில் ஏற்பட்ட மிகவும் சக்திவாய்ந்த நிலநடுக்கத்தால் இறந்தவர்களின் எண்ணிக்கை 1, 941ஆக உயர்ந்தது …

ஹைதியின் டிபுரோன் தீபகற்ப பகுதியில் சென்ற சனிக்கிழமையன்று சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டநிலையில் . இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 7.2 அலகுகளாக இருந்தது .இந்த நிலநடுக்கத்தினால் மனிதன் வசிக்கும் பல ஆயிரக்கணக்கான வீடுகள், கட்டிடங்கள் இடிந்து தரைமட்டமாகிது . மீட்பு பணி போர்க்கால அடிப்படையில் வருகின்றது. இதே சமையம் நேற்றும் கட்டிட இடிபாடுகளில் சிலர் சிக்கி உயிரிழந்து மேலும் பலரது சடலங்கள் மீட்கப்பட்டது. இதனை தொடர்ந்து இதுவரை உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 1,941 ஆகஉயர்ந்தது காயமடைந்தவர்களின் எண்ணிக்கையானது 9 ,900 அதிகரித்துள்ளது.

இதில்,ஏராளமானோர் சிகிச்சைக்காக மருத்துவமனை வராண்டாவில் காத்திருக்கின்றனர் என தெரிவிக்கின்றனர் . இதற்கிடையே கிரேஸ் என்ற பயங்கரமான புயல் தாக்கத்தால் நிலநடுக்கம் நடந்த பகுதிகளில்

கடும் கனமழை பொலிந்து வருகிறது. இதனால் மீட்புப் பணிகள் நிறுத்தி வைக்கும் நிலைமை ஏற்பட்டுள்ளது.கிட்டத்தட்ட 60,000 வீடுகள் இடிந்து விழுந்துள்ளதாகவும், 76,000 வீடுகள் குடியிருப்புகள் சேதமடைந்துள்ளதாகவும் கூறப்படுகிறது மற்றும் தேவாலயம் மருத்துவமனைகள்,

கல்லூரிகள், பள்ளிகள், அரசு அலுவலகங்கள், உள்ளிட்டவையும் பெரும் பாதிக்கப்பட்டுள்ளது……

தொடர்புடைய பதிவுகள்

Leave a Reply