தங்கம் வென்ற `தங்க மகன்’ நீரஜ் சோப்ரா மருத்துவமனையில் திடிர் அனுமதி…!!!!

தங்கம் வென்ற `தங்க மகன்’ நீரஜ் சோப்ரா மருத்துவமனையில் திடிர் அனுமதி…!!!!

தற்போது நடைபெற்ற டோக்கியோ ஒலிம்பிக்கில் தங்கம் வென்ற இந்தியாவின் தங்கமகன் நீரஜ் சோப்ரா திடீர்உடல்நிலை குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்

ஜப்பான் தலைநகரமான டோக்கியோவில் நடைபெற்ற ஒலிம்பிக் போட்டியில், நம் இந்திய வீரர் நீரஜ் சோப்ரா ஈட்டி எறிதலில் தங்கபதக்கத்தை வென்றார். இணைத்தொடர்ந்து இந்தியா திரும்பிய அவர், ரசிகர்களின் பாராட்டு கடலில் மூழ்கினர் மற்றும் அரசியல் தலைவர்கள் அவரை நேரில் சென்று சந்தித்தும், சமூக வலைதளங்கள் மூலமாகவும் அதிக பாராட்டு தெரிவித்தனர்தற்போதைய நிலையில் இன்று அரியானா மாநிலம் பானிபட்டில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற நீரஜ் சோப்ராவிற்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டது. இதையடுத்து நிகழ்ச்சியில் இருந்து அவர் பாதியிலேயே வெளியேறினார்.

தற்போது அங்கேயுள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள நீரஜ் சோப்ராவுக்கு, மிக அதிகமான காய்ச்சல் இருப்பதாக தகவல் வெளிவந்தது .ஒலிம்பிக்கில் தங்கம் வென்றதும் நாடு திரும்பிய நீரஜ் சோப்ரா, கடந்த ஒருசில காய்ச்சலால் பாதிக்கப்பட்டிருந்தார். இதைதொடர்ந்து அவருக்கு மருத்துவ பரிசோதனை மேற்கொள்ளப்பட்ட நிலையில் , கொரோனா இல்லை என்பது தெரியவந்தது. அதனை தொடர்ந்து காய்ச்சலில் இருந்து அடைந்து அவர், டெல்லி செங்கோட்டையில் நடைபெற்ற 75-வது சுதந்திர தினவிழாவில் பங்கேற்றார். அன்று மாலை நடைபெற்ற மாபெரும் நிகழ்ச்சியில் பிரதமர் நரேந்திர மோடியும், நீரஜ் சோப்ராவும் எந்தஒரு முகக்கவசங்களின்றி வெறும் 2 அடி இடைவெளியில் நின்று பேசினர்

. அதன்பின்பு நீரஜ் சோப்ராவுக்கு உடல்நலகுறைபாடு ஏற்பட்டுள்ள நிலையில், அவருக்கு மீண்டும் கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்படும் என்று கூறப்படுகிறது. ஒருவேளை கொரோனா உறுதி செய்யப்பட்டால் அவரை தொடர்புகொண்ட அனைவரையும் தனிமை படுத்த பெரிதும் வாய்ப்புள்ளது…..

தொடர்புடைய பதிவுகள்

Leave a Reply