10 ஆயிரம் செலுத்தினால் 16 லட்சம் கையில்… தமிழக அரசின் திட்டம்!!!

தொழில்நுட்பம் வேலைவாய்ப்பு

இந்த திட்டமானது தமிழக அரசின் அஞ்சல் அலுவலகங்களில் பயன்பாட்டில் உள்ளது. இந்த திட்டத்தின் பெயர் ரெகுரிங் டெபாசிட் திட்டம் ஆகும். சுருக்கமாக RD என்பர்.

இந்த திட்டத்தில் நீங்கள் செய்த முதலீட்டு’ தொகைக்கு மாதம் மாதம் 5.8 சதவீதம் வட்டியானது வழங்கப்படுகிறது. இதன் மூலம் நீங்கள் 16 லட்சம் திரும்பப் பெற இயலும்.

உங்களது 10 ஆயிரத்தை 16 லட்சமாக மாற்ற விரும்பினால் அதற்கு முதலில் நீங்கள் போக வேண்டிய இடம் உங்களுக்கு அருகாமையில் இருக்கும் அஞ்சல் அலுவலகமே…

சாதாரண குடும்பத்தில் இருப்பவர்களுக்கு திடீரென பெரிய தொகையை சம்பாதிக்க முடியாது. அப்படி இருப்பவர்களுக்கு இந்த திட்டமானது சிறந்த திட்டமாக இருக்கும். மேலும் உங்கள் குழந்தைகளுக்கு சேமிப்பு பற்றி சொல்லி கொடுக்க வேண்டும் என விரும்பினால் இந்த திட்டம் மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.

இந்த திட்டத்தில் உங்கள் முதலீடானது குறைந்த அளவே இருக்கும். அதே நேரத்தில் லாபமானது அதிக அளவில் இருக்கும். இந்த திட்டத்திற்கு அரசே கேரண்டி வழங்குகிறது. எனவே மிகவும் பாதுகாப்பான திட்டம் ஆகும்.

இந்த திட்டத்தில் நிறைய சலுகைகள் வழங்கப்படுகின்றன.

  • மிக குறைந்த தொகையை கூட முதலீடு செய்யலாம். 100 ரூபாய் கூட முதலீடாக செலுத்த இயலும்.
  • அதே போல உச்ச வரம்பும் இல்லை. விருப்பத் தொகையை செலுத்திக் கொள்ளலாம்.
  • வங்கிகளை விட அதிகப்படியான வட்டியும் கிடைக்கும்.
  • ஒவ்வொரு வருடாந்திர காலாண்டு முடிவிலும் கூட்டு வட்டியுடன் அந்த பணமானது உங்களது கணக்கில் சேர்க்கப்படும்.

வட்டி மற்றும் பிற விவரங்கள்:
இந்த திட்டத்திற்கு வட்டி சதவீதமானது 5.8 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்த நிர்ணயமானது மத்திய அரசால் கொடுக்கப்படுக்கிறது. ஒருவேளை நீங்கள் மாதத்திற்கு 10 ஆயிரம் முதலீடு செய்யலாம் என நினைத்தால் 10 வருடங்களுக்கு பிறகு உங்களுக்கு 16 லட்சம் மொத்தமாக கிடைக்கும்.

இந்த திட்டத்தில் நீங்கள் மாதம் மாதம் உங்கள் அஞ்சல் அலுவலகத்தில் செலுத்திய தொகைக்கு 5.8 சதவீதம் வட்டியானது கணக்கிடப்பட்டு உங்களது கையில் 16 லட்சமாக கொடுக்கப்படுகிறது.

இந்த திட்டத்தில் உங்களது 10 வயது குழந்தையை கூட இணைக்கலாம். இதன் மூலம் அவர்கள் சேமிப்பு பற்றி அறிந்து கொள்வார்கள்.

சிறு சிறு தொகையை எதிலாவது முதலீடு செய்ய வேண்டும் என நினைப்பவர்கள் இந்த RD திட்டத்த்தில் இணைந்து பங்கு பெறலாம். மேலும் இந்த திட்டத்திற்கு அரசே கேரண்டி கொடுக்கிறது. உடனே உங்கள் அருகிலுள்ள அஞ்சல் அலுவலகத்திற்கு சென்று பயன்பெறுங்கள்…

Leave a Reply