மிகவும் பிரபலமான PARLE G பிஸ்கட்டில் உள்ள குழந்தை யார் தெரியுமா? தற்போது எப்படி இருக்கிறார்?

Follow @ Google News : செய்திகளை உடனுக்குடன் பெற்றிட கூகுள் செய்திகள் பக்கத்தில் News V Tamil இணையதளத்தை ஃபாலோ செய்யுங்கள்.
PARLE G பிஸ்கட்டை பற்றி தெரியாதவர்கள் யாரும் இருக்க மாட்டார்கள். நாம் அனைவரும் சிறுவயதிலும் இப்போதும் கூட இந்த பிஸ்கட்டை சாப்பிட்டு வருகிறோம். PARLE G என்று சொன்னதும் நமது நினைவிற்கு வருவது அந்த பிஸ்கட்டில் இருக்கும் குழந்தை தான்.

அந்த குழந்தை யாராக இருக்கும்? அந்த குழந்தை தற்போது எப்படி இருக்கும்? எவ்வளவு வயதாகி இருக்கும்? என நிறைய கேள்விகள் நம் மனதில் எழுந்திருக்கும். அதற்கான பதிலை இந்த பதிவில் பார்க்கலாம்.
PARLE என்ற நிறுவனத்தின் ஒரு தயாரிப்பு தான் இந்த PARLE G பிஸ்கட்டுகள். இந்த PARLE நிறுவனமானது 1929ல் பாம்பேயில் துவங்கப்பட்டது. நிறுவனம் ஆரம்பித்த பிறகு 10 ஆண்டுகள் கழித்து தான் PARLE G பிஸ்கட்டுகள் தயாரிக்கப்பட்டன.
1960களில் தான் PARLE G பிஸ்கட்டில் அந்த குழந்தையின் புகைப்படம் அச்சிடப்பட்டு விற்பனை செய்யப்பட்டது.
2013ல் PARLE G பிஸ்கட்டில் உள்ள குழந்தை யார் என்ற கேள்வி சமூக வலைதளங்களில் பெரிதும் பேசப் பட்டதாக இருந்தது. இந்த கேள்விக்கு பலரும் பதில் அளித்து வந்தனர். ஆனால் ஒரு நபர் 65 வயது மதிக்கத்தக்க ஒரு பெண்மணியின் புகைப்படத்தை பதிவு செய்து அவரது பெயர் நீறு தேஷ்பாண்டே எனவும் இவர் தான் PARLE G பிஸ்கட்டில் உள்ள குழந்தை எனவும் பதிவிட்டிருந்தார்.

மேலும் நீறு தேஷ்பண்டேவிற்கு அந்த புகைப்படம் எடுக்கும்போது வயது 4 எனவும் குறிப்பிட்டிருந்தார். இந்த பதிவானது ஆயிரக்கணக்கோரால் பகிரப்பட்டது. உங்களுக்கு கூட இந்த பதிவு பகிரப்பட்டிருக்கலாம்.
ஆனால் இந்த செய்தி முழுக்க முழுக்க பொய்யான ஒன்று. அந்த 65 வயது பெண்மணி PARLE G பிஸ்கட்டில் உள்ள குழந்தை அல்ல. அந்த பெண்மணியின் உண்மையான பெயர் சுதா மூர்த்தி. இவர் INFOSIS நிறுவனத்தின் சேர்பெர்சன்.
இவர் அந்த குழந்தை இல்லையென்றால் PARLE G பிஸ்கட்டில் உள்ள குழந்தை யார் என்ற கேள்வி எழுந்தது. இந்த பொய்யான வதந்திகள் PARLE நிறுவனம் வரை சென்று விட்டது. எனவே PARLE நிறுவனம் இது குறித்த தெளிவான விளக்கத்தை வெளியிட்டது.

இது குறித்து PARLE நிறுவனம் கூறியதாவது, PARLE G பிஸ்கட்டில் உள்ள குழந்தை முழுவதும் கற்பனையால் ஆன குழந்தை. அப்படி ஒரு குழந்தையே கிடையாது. அந்த குழந்தையின் புகைப்படம் 1960ல் உருவாக்கப்பட்டது எனவும் அந்த புகைப்படத்தை உருவாக்கியது EVEREST நிறுவனத்தை சேர்ந்த மகத் லால் என்ற ஒரு கலைஞர் எனவும் குறிப்பிட்டிருந்தது.
இந்த செய்தியானது அனைத்து வதந்திகளுக்கும் முற்று புள்ளி வைக்கும் விதமாக அமைந்திருந்தது.
Follow @ Google News : செய்திகளை உடனுக்குடன் பெற்றிட கூகுள் செய்திகள் பக்கத்தில் News V Tamil இணையதளத்தை ஃபாலோ செய்யுங்கள்.