OPSன் மனைவி விஜயலட்சுமி காலமானார்!!! இறப்பிற்கு இது தான் காரணமா…

Follow @ Google News : செய்திகளை உடனுக்குடன் பெற்றிட கூகுள் செய்திகள் பக்கத்தில் News V Tamil இணையதளத்தை ஃபாலோ செய்யுங்கள்.
அ.தி.மு.க வின் ஒருங்கிணைப்பாளர் ஒ. பன்னீர் செல்வத்தின் மனைவி விஜயலட்சுமி இன்று காலமானார். மாரடைப்பு காரணமாக சென்னை பெருங்குடி தனியார் மருத்துவமனையில் அனுமதிக்க பட்டிருந்த நிலையில் இன்று காலை மரணமடைந்தார்.

அவரது உடல் தேனிக்கு எடுத்து செல்லப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அ.தி.மு.க வின் இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி உட்பட அனைவரும் மருத்துவமனைக்கு நேரில் சென்றனர்.
63 வயதான opsன் மனைவி கடந்த இரு வாரங்களாக உடல் நலக் குறைவால் அவதிப் பட்டு வந்துள்ளார். இந்நிலையில் தான் சென்னை பெருங்குடியில் உள்ள தனியார் மருத்துவமனையில் அவர் அனுமதிக்க பட்டுள்ளார். தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில் இன்று திடீர் மாரடைப்பால் அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

விஜயலட்சுமியை இழந்து வாடக் கூடிய ஓ.பன்னீர் செல்வத்திற்கும் அவரது குடும்பத்திற்கும் பல்வேறு அரசியல் கட்சி தலைவர்களும் தங்களது இரங்கலைத் தெரிவத்த வண்ணம் உள்ளனர்.

பன்னீர் செல்வத்தின் இளைய சகோதரரான ஓ. பால முருகன் தேனி மாவட்டம் பெரிய குளத்தில் கடந்த மே மாதம் காலமானார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் தற்போது opsன் மனைவி காலமானது சோகத்தை ஏற்ப்படுத்தியுள்ளது.
Follow @ Google News : செய்திகளை உடனுக்குடன் பெற்றிட கூகுள் செய்திகள் பக்கத்தில் News V Tamil இணையதளத்தை ஃபாலோ செய்யுங்கள்.