நவம்பர் 1 முதல் 1-8 வகுப்புகளுக்கு பள்ளிகள் திறப்பு… தமிழக அரசு அதிகாரப்பூர்வ தகவல்!!!

கல்வி தமிழ்நாடு

நவம்பர் 1ம் தேதி முதல் 1ம் வகுப்பு முதல் எட்டாம் வகுப்பு வரை பள்ளிகளை திறக்க தமிழக அரசு அனுமதி வழங்கியிருக்குறது.

ஏற்கனவே 9ம் வகுப்பு முதல் 12 வகுப்பு வரை பள்ளிகள் செயல்பட்டுக் கொண்டிருக்கும் நிலையில் தற்போது ஒன்று முதல் எட்டாம் வகுப்பு வரை உள்ள மாணவர்களுக்கு பள்ளிகளை திறக்க தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.

ஒரு வாரத்திற்கு முன்பே 1-8 வகுப்புகளுக்கு பள்ளிகள் திறப்பது குறித்து ஆலோசனை நடத்தப்பட்டது. இந்த ஆலோசனையின் அறிக்கைகளும் தமிழக அரசுக்கு சமர்ப்பிக்கப்பட்டது.

தற்போது செப்டம்பர் 30 முதல் ஊரடங்கு முடிவடைய உள்ள நிலையில், தமிழக முதல்வர் தளர்வுகள் குறித்து ஆலோசனை செய்தார். அதிலும்1-8 வகுப்பு மாணவர்களுக்கு பள்ளிகளை திறக்கலாமா அல்லது முதற்கட்டமாக 6-8 வகுப்புகளுக்கு மட்டும் பள்ளிகளை திறக்கலாமா என ஆலோசனை நடத்தப்பட்டது.

தற்போது இருக்கும் கொரோனா சூழ்நிலையில் 1-8 வகுப்பு மாணவர்களுக்கு பள்ளிகளை திறப்பது அவசியமா என கேள்வி எழுந்தது…
ஆனாலும் 1-8 வகுப்பு மாணவர்கள் கிட்டத்தட்ட 2 ஆண்டுகளாக பள்ளிகள் செல்லாமல் இருப்பதால் மனதளவில் அவர்கள் பாதிக்கப்பட்டிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

தற்போது அக்டோபர் மாதம் கொரோனா நிலை எப்படி இருக்கும் என்பதை அடிப்படையாகக் கொண்டே இந்த முடிவு எடுக்கப்பட்டதாகவும் மேலும் மருத்துவ நிபுணர்கள் அளித்த ஆலோசனையின் அடிப்படையிலுமே அனைவரிடமும் கலந்தாலோசித்து இந்த முடிவு எடுக்கப்பட்டதாக பள்ளிக் கல்வி துறை தெரிவித்துள்ளது.

கொரோனா காரணமாக கடந்த இரண்டு ஆண்டுகளாக மாணவர்கள் பள்ளிக்கு செல்லாத நிலையில், தமிழகத்தில் ஒரு மாதமாக 50 விழுக்காடு மாணவர்களுடன் சுழற்சி முறையில் 9 முதல் பன்னிரண்டாம் வகுப்பு மாணவர்களுக்கு பள்ளிகள் செயல்பட்டுவருகிறது.

இந்நிலையில் 130 மாணவர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனையடுத்து தற்போது 1-8 வகுப்பு மாணவர்களுக்கு நேரடி வகுப்புகள் நவம்பர் 1 முதல் செயல்பட இருப்பதாக தமிழக அரசு அதிகாரப் பூர்வ அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

இதற்கான வழிகாட்டு நெறிமுறைகளும் வெளியிடப்படும் எனத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

Leave a Reply