அடுத்து 5 – வது ஹனிமூனா? வனிதாவின் மாலத்தீவு போட்டோவை பார்த்து வியந்துபோன நெட்டிசன்கள் இணையத்தில் வைரல் ஆகிறது !!

சினிமா

பிரபல ஹீரோயின் யான வனிதா விஜயகுமார் பீட்டர் பாலை மூன்றாவதாக கல்யாணம் செய்துகொண்டார். அதன்பின்னர், பீட்டர் பால் குடிப்பதால், சண்டையிட்டு தற்போது பிரிந்து வாழ்ந்துவருகின்றனர்
இதனிடையே, வனிதா தன் மகள்களுடன் மாலத்தீவுகளுக்கு சென்றுள்ளார். அங்கு எடுத்த புகைப்படங்களை அவர் இன்ஸ்டாகிராமில் பதிவுசெய்துள்ளார்.


மேலும், மாலத்தீவில் டூரிஸத்தை முன்னேற்றுவதற்காக அரசு இன்ஸ்டாகிராமில் 2 மில்லியனுக்கும் அதிகமாக ஃபாலோயர்கள் இருப்பவர்கள் மாலத்தீவுக்கு வருகை தந்தால் அவர்களுக்கு ஹோட்டலில் உணவு இலவசம் என்றும் தெரிவித்திருந்தனர்.


ஐந்து மில்லியனுக்கும் அதிகமான ஃபாலோயர்கள் இருப்பவர்கள் வருகை தந்தால் அவர்களுக்கு ஹோட்டல் உணவு மற்றும் 2 ரிட்டர்ன் டிக்கெட் இலவசம் என்றும் 10 மில்லியனுக்கு மேல் ஃபாலோயர்கள் இருப்பவர்கள் வருகை தந்தால் போகவர டிக்கெட் மற்றும் ஹோட்டல், உணவு, தங்குமிடம் என அனைத்துமே இலவசம் என அறிவித்துள்ளது.

இதனால், மாலத்தீவில் மல்லாக்க படுத்தபடி விதவிதமாக போஸ் கொடுத்துள்ள வனிதா, அந்த போட்டோக்கள் அனைத்தையும் தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

இதற்கு முன்னதாக பீட்டர் பால் மற்றும் மகள்களுடன் மஜாவா கோவா சென்ற வனிதா, திரும்பி வரும் போது தனியாக தான் வந்தார். அங்கு குடிபோதையில் பீட்டர் பால் செய்த தகராறால் இருவரும் சண்டை போட்டு பிரிந்தனர்.


அதனை மனதில் வைத்துள்ள ரசிகர்கள் பலரும் இது என்ன 5-வது ஹனிமூனுக்காக போய் இருக்கீங்களா? என வனிதாவை கலாய்த்து வருகின்றனர்.

Leave a Reply