சீனாவில் வெளியாக போகும் தளபதி விஜய்யின் திரைப்படம்!!!

சினிமா

தளபதி விஜய் அவர்களின் மெர்சல் படத்திற்கு மறுபடியும் ஒரு அங்கீகாரம் கிடைத்துள்ளது. மெர்சல் படம் தற்போது சீனாவில் வெளியாகப் போவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

மெர்சல் படம் கடந்த 2017ம் ஆண்டு வெளியாகி நிறைய பிரச்சனைகளை தாண்டி மிகப் பெரிய வெற்றியை கண்டது. அந்த படம் தற்போது சீனாவில் வெளியாக உள்ளது.

இதற்கு முன் சீனாவில் வெளியான இந்திய படங்கள் அமிர்கானின் PK மற்றும் பாகுபலி1 , பாகுபலி 2 ஆகும். இந்த படங்கள் சீனாவில் மிகப் பெரிய வரவேற்பை பெற்றன. இதனை தொடர்ந்து தற்போது மெர்சல் படத்தையும் சீனாவில் வெளியிட இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

அப்படி வெளியானால் மெர்சல் தான் சீனாவில் வெளியான முதல் தமிழ் படமாக இருக்கும். தேனாண்டால் நிறுவனமானது இது குறித்து அதிகாரப்பூர்வமாக தகவலை ட்விட்டரில் கூறியுள்ளது.அதில், சீனாவில் வெளியாகப் போகும் முதல் தமிழ் திரைப்படம் மெர்சல் என்பதில் மிகவும் பெருமிதம் கொள்வதாக தெரிவிக்கப்பட்டிருந்தது.

மெர்சல் படமானது விஜய் ரசிகர்கள் மட்டுமல்லாமல் அனைவருக்கும் பிடித்த படமாக அமைந்தது.மெர்சல் படமானது தமிழில் வெளியாகி 250 கோடிக்கும் அதிகமான வசூலைப் பெற்றது. மேலும் அதிகப்படியான விருதுகளை வாங்கிக் குவித்தது. அந்த படத்திற்கு தற்போது மீண்டும் ஒரு பெருமை கிடைத்துள்ளது என்பது மகிழ்ச்சியான ஒரு செய்தி.

மெர்சல் படத்தை சீனாவில் வெளியிடபோகும் முடிவானது 3 ஆண்டுகளுக்கு முன்பே எடுக்கப்பட்டது. அதற்குரிய டப்பிங் வேலைகள் நடந்து கொண்டிருந்த சூழ்நிலையில் தான் கொரோனா பெருந்தொற்று பரவியது. எனவே இந்த பணிகள் முடங்கப்பட்டன.

கொரோனா பெருந்தொற்று காலம் முடிந்த பின்னர், ஊரடங்கு அனைத்தும் நிறைவடைந்த பின்னர் இதன் பணிகள் மீண்டும் துவங்கப்படும் என எதிர்பாக்கப்படுகிறது.மேலும் இதே போல நல்ல திரைப்படங்கள் தமிழில் வெளியாகி உலக அளவில் பெயர் பெற வேண்டும்.

Leave a Reply