பூனைக்கு வந்த அதிஷ்டம் பாருங்க !!கருவுற்ற பூனைகளுக்கு அரங்கேறிய வளைகாப்பு: சீர் வரிசையாக வைக்கப்பட்டது என்ன தெரியுமா?

சினிமா

கோவை வேளாண்டிபாளையம் பகுதியில் உமா மகேஸ்வரன் – சுபா தம்பதியினர் வசித்து வருகின்றனர். வீட்டில் அவர்கள்இரண்டு பெண், ஒரு ஆண் உள்பட மூன்று பூனைகளை வளர்த்து வந்தனர்.இந்நிலையில் அவர்களதுஇரண்டு பெண் பூனைகளும் கருவுற்றது.

பூனைகள் கர்ப்பமானது அருகில் இருந்த கால்நடை மருத் துவ ம னை மூலம் உறுதி செய்யப்பட்டது.இதையடுத்து உமா மகேஸ்வரன் கு டும்ப த்தி னர் அந்த பூனைகளுக்கு வளைகாப்பு நடத்தினர். மருத் துவ ம னை வளாகத்தில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில்


கருவுற்ற பூனைகள் அலங்கரிக்கப்பட்டன.நெற்றியில் பொட்டு வைக்கப்பட்டு, கைகளில் வளையலுக்கு பதில் கழுத்தில் மணிகள் கட்டப்பட்டன.
மேலும் அந்த பூனைகளுக்கு பிடித்த பழங்கள், பிஸ்கட்கள் மற்றும் இனிப்புகள் உள்பட உணவு பொருட்கள் சீர் வரிசையாக வழங்கப்பட்டன. நிகழ்ச்சியில் அங்கிருந்த பலர் கலந்து கொண்டனர்.

Leave a Reply