மஞ்சள் கருவிற்கு பதிலாக பச்சை கரு… பச்சை முட்டையிட்ட கோழிகள்!!! கேரளாவில் அதிசய நிகழ்வு…

Follow @ Google News : செய்திகளை உடனுக்குடன் பெற்றிட கூகுள் செய்திகள் பக்கத்தில் News V Tamil இணையதளத்தை ஃபாலோ செய்யுங்கள்.
கேரளாவில் மலப்புரத்தில் உள்ள கோழி பண்ணையில் உள்ள நிறைய கோழிகள்
பச்சை நிற கருக்களை கொண்ட முட்டைகளை இட்டன. இதனை தொடர்ந்து கேரள கால்நடை மற்றும் விலங்குகள் அறிவியல் பல்கலைகழகத்தில் உள்ள விஞ்ஞானிகள் ஏன் இவ்வாறு கோழிகள் பச்சை நிற கருவை இடுகின்றன என ஆய்வு செய்தனர்.

சிஹாபுதீன் என்பவர் கேரளாவில் ஒரு சிறிய கோழிப் பண்ணை வைத்திருக்கிறார். அவர் தனது சமூக வலைதளத்தில் தனது பண்ணையில் உள்ள கோழிகள் மஞ்சள் கருவிற்கு பதிலாக பச்சை கருவை கொண்ட முட்டைகளை இட்டதாகவும் அதன் புகைப்படங்களையும் வெளியிட்டிருந்தார். அவரது பண்ணையில் உள்ள ஆறு கோழிகள் இவ்வாறு முட்டைகளை இட்டுள்ளன.
சிஹாபுதீனும் அவரது குடும்பத்தினரும் இந்த அறிய வகை பச்சை கருவை கொண்ட முட்டைகளை கடந்த ஆறு மாதங்களாக பார்த்துள்ளனர். ஆனால் தற்போது தான் சமூக வலைதளங்களில் அவர் புகைப்படங்களை பகிர்ந்துள்ளார்.
அந்த குடும்பம் முதலில் அந்த பச்சை கரு கொண்ட முட்டைகளை உட்கொள்ளவில்லை. அதற்கு பதிலாக சிஹாபுதீன் சில முட்டைகளை அடை காத்து குஞ்சுகள் பொரிக்க விட்டார். ஆச்சரிய விதமாக புதிதாக பிறந்த கோழிகளும் பச்சை கரு கொண்ட முட்டைகளையே இட்டன.

இந்த புகைப்படங்களும் வீடியோக்களும் சமூக வலைதளங்களில் வைரலானதை கண்டு, கேரள கால்நடை மற்றும் விலங்கு அறிவியல் பல்கலைகழக விஞ்ஞானிகள் அந்த பண்ணையை நேரில் நேரில் சென்று பார்வையிட்டனர். அங்கிருந்த ஒரு கோழியையும் பச்சை கருவை கொண்ட சில முட்டைகளையும் எடுத்து சென்றனர்.
அப்பல்கலைகழகத்தின் உதவிப் பேராசிரியர் Dr. சங்கரலிங்கம் இது பற்றி கூறியதாவது, இந்த கோழிகள் மஞ்சள் கருவிற்கு பதிலாக பச்சை கருவை கொண்ட முட்டைகளை இட்டதற்கான காரணம் எந்த மரபணு கோளாறும் இல்லை என கூறினார்.
அவர்கள் அந்த கோழியை ஆய்வு செய்த பிறகு, இந்த கோழிகள் பச்சை நிற கருவினை கொண்ட முட்டைகளை இடுவதற்கான காரணம் அவைகள் சாப்பிட்ட உணவாக தான் இருக்க வேண்டும்.

நாங்கள் வேறு உணவினை அளித்த போது அந்த கோழிகள் சாதாரண கோழிகளைப் போலவே மஞ்சள் நிற கருக்களை கொண்ட முட்டைகளையே இட்டன.. என கூறினர்.
இந்த புகைப்படங்களும் செய்தியும் தற்போது சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது.
Follow @ Google News : செய்திகளை உடனுக்குடன் பெற்றிட கூகுள் செய்திகள் பக்கத்தில் News V Tamil இணையதளத்தை ஃபாலோ செய்யுங்கள்.