Jack Sparrow மனைவியை கொடுமை படுத்தும் ஒரு நபரா… Jhonny deppஇன் மறு பக்கம்!!!

உலகம் சினிமா

Jhonny depp என்று சொல்வதை விட Jack Sparrow என்று சொன்னால் தான் நிறைய பேருக்கு தெரியும். ஏனெனில் அந்த ஒரு கதாபாத்திரம் தான் நிறைய மக்களை கவர்ந்திழுத்த கதாபாத்திரமாக அமைந்தது. இப்படிப்பட்ட Jhonny deppஇன் வாழ்க்கை ஒரு பெண்ணால் தலைகீழாக மாறியுள்ளது.

இவர் உலகத்திலேயே அதிக சம்பளம் வாங்கும் நடிகராக 2012ல் கின்னஸில் இடம் பெற்றவர். 10 முறை golden globe கு பரிந்துரை செய்யப்பட்டுள்ளார். 3 முறை அகாடமிக் விருதுகளுக்கு பரிந்துரை செய்யப்பட்டுள்ளார். ஆனால் இவரது தனிப்பட்ட வாழ்க்கை என்பது சிக்கலான ஒன்றாக தான் உள்ளது.

1983ல் Jhonny deppக்கும் லோர்ரி அலிசன் என்ற பெண்ணுக்கும் திருமணம் நடைபெற்றது. ஆனால் திருமணம் நடந்த 2 ஆண்டுகளிலேயே விவாகரத்தும் நடந்து முடிந்தது.

அதன் பிறகு 2015ல் அம்பர் ஹெர்ட் என்ற பெண்ணை சந்திக்கிறார். இந்த பெண் வேறு யாரும் இல்லை. Aquaman திரைப்படத்தின் கதாநாயகி தான். இந்த பெண்ணை 2015ல் Jhonny depp இரண்டாவதாக திருமணம் செய்து கொள்கிறார்.

அனால் திருமணம் நடந்த ஒரு வருடத்திலேயே அம்பர் ஹெர்ட் Jhonny deppன் மீது ஒரு வழக்கு பதிவு செய்தார். அது என்ன வழக்கெனில், Jhonny depp என்னை வன்முறையாக தாக்கிவிட்டார் என்பது தான்.

இந்த வழக்கானது 2016ல் போடப்பட்டது.அதன் பிறகு 2017ல் விவாகரத்தும் பெற்றுக் கொண்டனர். ஆனால் தற்போது 2021 வரை இந்த வழக்கிற்கான தீர்ப்பு வழங்கப்படவில்லை.

இந்த வழக்கானது தற்போது நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. அதில் இருவரும் ஒருவர் மீது ஒருவர் குற்றம் சுமத்தி வருகின்றனர். Jhonny depp தனது மனைவி தான் சண்டையின் போது தன்னை தாக்குவார் என கூறியுள்ளார். ஆனால் அவரது மனைவியோ Jhonny depp தன்னை துன்புறுத்தும் வீடியோவை நீதிமன்றத்தில் சமர்ப்பித்துள்ளார்.

FILE – MAY 25: Amber Heard has reportedly filed for divorce from Johnny Depp. The couple were married in February 2015 after meeting on the set of “The Rum Diary.” LONDON, ENGLAND – OCTOBER 11: Amber Heard and Johnny Depp attend the “Black Mass” Virgin Atlantic Gala screening during the BFI London Film Festival, at Odeon Leicester Square on October 11, 2015 in London, England. (Photo by John Phillips/Getty Images for BFI)

ஆனால் இந்த செய்தியானது பிரபலமான செய்தித்தாள்கள் அனைத்திலும் வந்து விட்டது.இதன் பிறகு Jhonny depp நடிக்க இருந்த பல படங்கள் அவரது கையை விட்டு நழுவி சென்றன. இந்த வழக்கை முடித்துவிட்டு Jhonny depp மீண்டும் தனது நிலைக்கு திரும்ப வருவார் என அவரது ரசிகர்கள் எதிர்பார்க்கின்றனர்.

Leave a Reply