அடேங்கப்பா..!! குழந்தைகளை கவனித்து கொள்வது இவ்வளவு கடினமான ஒன்றா?? மகன்களை சமாளிக்கவே என் சக்தி போயிடுது!! குடும்பத்துடன் தொகுப்பாளினி அஞ்சனா பதிவிட்ட போட்டோ இதோ .!!

சினிமா

சண் மியூசிக் தொலைகாட்சியின் மூலம் மக்களிடையே பிரபலமானவர் அஞ்சனா, கிட்ட தட்ட பத்துவருடம் களுக்கு மேல் தொகுப்பாளின்யாக இருந்து வந்தவர். சின்ன திரை ரசிகர்களிடையே, தொலைக்காட்சி ரசிகர்களிடையே பெரும் பிரபலமடைந்த இவர், பிரபல படமான கயல் படத்தில் நடித்த நடிகர் சந்திரனை திருமணம் செய்து கொண்டு தற்போது வாழ்ந்து வருகின்றனர். இவர்கள் இருவருக்கும் கடந்த 2018 ஆம்வருடம் ஜூலை மாதம் அழகான ஆண் குழந்தை பிறந்ததது. இதனால் பலரும் இவருக்கு வாழ்த்து மழைகளை பொழிந்து வந்தார்கள்.


இவர்கள் இருவரும் ரொம்ப காலமாகவே காதலித்தது வந்தனர். பின்னர் இரு வீட்டார் சம்மதத்துடன் கடந்த 2015 ஆம்வருடம் நவம்பர் மாதம் அனைவரின் முன்னிலையிலும் நிச்சயதார்த்தம் செய்து கொண்டனர். பினர் ஒரு வருட காலம் இடைவெளியில், கடந்த 2016 ஆம்வருடம் MARCH மாதம் கோடம்பாக்கத்தில் உள்ள கோவில் ஒன்றில் இவரின் திருமணமும் நடந்தது, சந்திரன் – அஞ்சனா தம்பதியருக்கு பிறந்த ஆண் குழந்தைக்கு ருத்ராக்ஸ் என்று பெயர் வைத்துள்ளனர்.


குழந்தை பிறந்த பின்னர் அஞ்சனா தொகுப்பாளினி பணியை தொடர்ந்து செய்வாரா என்ற கேள்வி எழுந்தது.தனது தொகுப்பாளினி பணிக்கு திரும்பியுள்ளார். ஆனால், இம்முறைZEE தமிழ் தொலைக்காட்சியில் தொகுப்பாளினியாக களமிரங்கியுள்ளார் அஞ்சனா.


மேலும்,ZEE தமிழ் தொலைக்காட்சிக்கு வந்தது குறித்து பேசிய அஞ்சனா, பத்து வருடங்களாக சன் ம்யூசிக்கில் இருந்து விட்டேன் நான் பிரேக் எடுத்த பின்னர் பலர் என்னை மீண்டும் வரச் சொல்லி அணுகினார்கள்.எனவே, தொகுப்பாளினியாக மீண்டும் பணியாற்ற விரும்பினேன்.


மேலும், நான் வேலை செய்யும் இடத்தையும் ஒரு மாற்றத்திற்காக மாற்றிக் கொள்ளலாம் என்று விரும்பினேன்.நான்ZEE தமிழ் தொலைக்காட்சியில் சேர்ந்ததுமே நான் போட்ட 1 கண்டிஷன் என் குழந்தையுடன் நான் எப்போதும் இருக்க வேண்டும் என்பதுதான். ஷூட்டிங்கின்போது கூட தனது குழந்தையுடன் நான் இருக்க வேண்டும் என்று கூறினேன்.


அதற்கு அவர்களும் சம்மதித்தார்கள் அதனால் எனக்கு வேறு என்றும் தேவைப்படவில்லை என்று கூறியிருந்தார் அஞ்சனா. இப்படி ஒரு நிலையில் தனது மகனின் புகைப்படத்தை பதிவிட்டுள்ள அஞ்சனா, என் மகன் மிகவும் வளர்ந்துவிட்டான், அவனை சமாளிப்பதிலேயே என் சக்தி போய்விடுகிறது என்று கூ – றியுள் ளா ர்.

Leave a Reply