கையும் களவுமாக சிக்கிய கோபி, ராதிகா.. நேரில் பார்த்த பாக்யாவுக்கு காத்திருந்த ஷாக் – பாக்கியலட்சுமி இன்றைய முழு எபிசோடு 04/07/2022

TV Serial

தமிழ் சின்னத்திரையில் VIJAY டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் பாக்கியலட்சுமி. இன்றைய எபிசோட்டில் டாக்டரை பார்த்து பேசிய ராதிகா கோபி ரூமுக்கு சென்று அமர்ந்து கொண்டு இருக்க அப்போது பாக்கியா உள்ளே வர வேறு வழியாக செல்லுமாறு நர்ஸ் கதவை சாத்தி விடுகிறார்.

அதன் பின்னர் பாக்கியா வேறு ஒரு வழியாக உள்ளே சென்றபோது கோபி ராதிகாவின் கையை பிடித்துக் கொண்டு என்னை விட்டு போய்டாத, நீ இல்லாம என்னால வாழ முடியாது. நீ என்னை விட்டுப் போயிட்டா நான் செத்து போயிடுவேன் என சொல்ல இதைக் கேட்டு அதிர்ச்சி அடைகிறார். அப்போதும் பாக்யா ராதிகாவின் முகத்தை பார்க்கவில்லை.

இதைக் கேட்டதும் அதிர்ச்சியான பாக்கியா வெளியில் வந்ததும் மயங்கி விழுந்து விட அங்கிருந்த பெண்கள் அவரை சேரில் அமர வைத்து தண்ணீர் கொடுத்து ஆசுவாசப்படுத்துகின்றனர். ‌ அதன் பின்னர் ராதிகா வெளியே வந்தேன் கோபியின் குடும்பத்தாரின் நம்பரை எழுதிக் கொடுத்துவிட்டு வீட்டிற்கு கிளம்புகிறார். இந்த நேரத்தில் நர்ஸ் ஒருவர் கோபியின் மனைவி வாங்க என சொல்ல ராதிகா இதைக் கேட்டு திரும்பி வந்து சொல்லுங்க என கேட்கிறார்.

ராதிகாவின் முகத்தை பார்த்த பாக்யா இன்னும் அதிர்ச்சடைகிறார். நர்சிடம் பேசிவிட்டு அவர் வீட்டிற்கு கிளம்பி விட பாக்கியா ராதிகா தன்னுடைய 2-வது கல்யாணம் பற்றி சொன்னதையும் கோபி உன்னை எனக்கு என்னைக்குமே பிடிக்காது என குடிப்பதில் சொன்னதையும் நினைத்து பார்த்து அழுது கொண்டே மருத்துவமனையில் இருந்து வெளியேறுகிறார். இத்துடன் இன்றைய பாக்கியலட்சுமி சீரியல் எபிசோட் முடிவடைகிறது.

Leave a Reply