அடுத்து யாரை திருமணம் பண்ண போறீங்க.. ஓப்பனாக பதிலளித்த பாவனி இணையத்தில் வைரல் ஆகிறது !!

சினிமா

விஜய் டிவியில் ஒளிபரப்பான சின்னத்தம்பி என்ற சீரியல் மூலம் ரசிகர்களின் மனதில் இடம் பிடித்தவர் நடிகை பவானி ரெட்டி. அதை தொடர்ந்து அவர் கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய பிக் பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளராக பங்கேற்றார்.

அதிலும் ரசிகர்களுக்கு பிடித்த போட்டியாளராக வலம் வந்த பவானி, வைல்ட் கார்டு என்ட்ரி ஆகBIG BOSS வீட்டிற்குள் வந்த அமீருடன் காதல் சர்ச்சையில் சிக்கினார். மேலும் பிக்பாஸின் மற்றொரு போட்டியாளர் அபிநயுடன் அவர் நெருக்கமாக பழகியதும் பல பிரச்சனைகளை ஏற்படுத்துகிறது.

இருப்பினும் பவானி, ரசிகர்களின் ஆதரவுடன் பிக் பாஸ் நிகழ்ச்சியின் இறுதி வரை சென்றார். இந்நிலையில்BIG BOSS நிகழ்ச்சி முடிந்த பிறகு அவர் தன் ரசிகர்களுடன் கலந்துரையாடினார். அதில் ரசிகர்கள் கேட்ட பல கேள்விகளுக்கு அவர் சுவாரசியமாக பதிலளித்தார்.


அதில் ஒரு ரசிகர் அவரின் இரண்டாவது திருமணம் குறித்து கேள்வி கேட்டார். அவரின் அந்த கேள்விக்கு பதிலளித்த பவானி, என் வாழ்க்கையில் இனி திருமணம் என்பது கிடையாது. நான் என்னுடைய முழு கவனத்தையும் சினிமா மற்றும் நடிப்பில் மட்டுமே செலுத்த போகிறேன் என்று கூறினார்.

பிக்பாஸ் வீட்டில் இருந்த பொழுது பவானி தன்னுடைய முதல் திருமண வாழ்க்கை பற்றியும், தன் கணவரின் இறப்பு பற்றியும் உருக்கமாக தெரிவித்தார். மேலும் டான்ஸ் மாஸ்டர் அமீர் தன் காதலை பவானியிடம் வெளிப்படையாக தெ ரி – வி த் த போதும் அவர் அதை நாசூக்காக மறுத்து விட்டார்.

இருந்தாலும் பவானி எப்படியாவது திருமண பந்தத்தில் நுழைவார் என்று எதிர்பார்த்த அவரது ரசிகர்களுக்கு பவானி கூறிய இந்த பதில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அவர் எப்படி வெளிப்படையாக கூறினாலும் தனது ஆண் நண்பருடன் புத்தம் புது வீட்டில் இருந்து வெளியிட்ட போட்டோ சமூக வலைத்தளங்களில் வெளியானது.

தற்போது எதை நம்புவது என்று தெரியவில்லை. பவானி தன் திருமணத்தை பற்றி கூறிய இந்த பதிவு தற்போது social மீடியாவில் வைரலாகி வருகிறது.

Leave a Reply