ஆன்லைன் ஆர்டரில் கிடைத்த குழந்தை!!! இங்கிலாந்தில் நெகிழ்ச்சி சம்பவம்…

உலகம்

இங்கிலாந்தை சேர்ந்த பெண் ஒருவர் ஆன்லைன் வழியாக விந்தணுக்களை ஆர்டர் செய்து பெற்றுக் கொண்டு குழந்தை பெற்றெடுத்த சம்பவம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

இங்கிலாந்து நாட்டை சேர்ந்தவர் ஸ்டெபினி டெய்லர். இவருக்கு 33 வயது ஆகிறது. இவருக்கு திருமணமாகி பிராங்க்ளின் என்ற ஒரு மகன் உள்ளார். தற்போது ப்ரன்க்ளினுக்கு 4 வயதாகிறது.

இந்நிலையில் டெய்லருக்கும் அவரது வாழ்க்கை துணைக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்ப்பட்டதால் அவர்களது உறவில் விரிசல் ஏற்ப்பட்டது. தற்போது டெய்லர் தனியாக வாழ்ந்து வருகிறார். இந்த சூழ்நிலையில் 2வதாக ஒரு குழந்தை பெற்றுக் கொள்ள விரும்பினார் டெய்லர்.

ஆனாலும் அவர் வேறு நபரை தனது வாழ்க்கை துணையாக தேர்ந்தெடுக்க விரும்பவில்லை. செயற்கை கருத்தரித்தல் மூலம் குழந்தை பெற்றுக்கொள்ள நினைத்தார். ஆனால் அதற்கு 2 லட்சம் வரை செலவு செய்ய வேண்டியிருந்தது. அதனால் அந்த திட்டத்தை அவர் கைவிட்டார் .

எனவே அதற்கு மாற்று வழி ஏதேனும் உள்ளதா என டெய்லர் இனையதளத்தில் தேடி உள்ளார். அப்போது விந்தணுக்களை பெற செயலி ஒன்று இருப்பதை டெய்லர் கண்டுபிடித்தார். அந்த செயலியின் பெயர் JUST A BABY. இந்த செயலியின் மூலம் அவருக்கு ஒரு விந்தணு கொடையாளர் கிடைத்தார்.

பின்னர் சில வாரங்களுக்கு பிறகு டெய்லரின் வீட்டிற்கு வந்து விந்தணுக்களை ஒப்படைத்தார் அந்த கொடையாளர். இந்த நிகழ்வானது கடந்த 2020ம் ஆண்டு ஜனவரியில் நடைபெற்றது. அதன் பின்னர் கருத்தரித்தல் கருவியை ஆன்லைனில் ஆர்டர் செய்தார் டெய்லர்.

மேலும் யூட்யுப் மூலம் அவற்றை எப்படி பயன்படுத்துவது என தெரிந்து கொண்டார். அதன் பின்னர் கொடையாக பெற்றுக் கொண்ட விந்தணுக்களை தனது உடலில் செலுத்தியுள்ளார்.

பின்னர் சில வாரங்களில் டெய்லர் கர்ப்பம் தரித்துள்ளார். தற்போது அவருக்கு அழகான பெண்குழந்தை ஒன்று பிறந்துள்ளது. இந்த குழந்தைக்கு ஈடன் என பெயர் சூட்டப்பட்டுள்ளது. இது குறித்து டெய்லர் கூறுகையில், தனது மகன் பிராங்க்ளின் தனியாக வளர விரும்பவில்லை எனவும் எனவே தான் இந்த முடிவை அவர் எடுத்ததாகவும் இங்கிலாந்து பத்திரிக்கைகளில் அவர் தெரிவித்துள்ளார்.

மேலும் குழந்தைக்காக வேறு ஒரு ஒருவரை தேடாமல் இந்த முடிவை எடுத்ததற்காக டெய்லரின் குடும்பத்தினர் அவரை பாராட்டி வருகின்றனர். ஆனால் இது குறித்து மருத்துவர்கள் கூறுகையில், இது போன்று மருத்துவ ஆலோசனையின்றி மேற்கொள்ளப்படும் செயல் உயிருக்கு ஆபத்தை விளைவிக்கும்.

எனவே இந்த செயலை யாரும் முயற்சிக்க வேண்டாம் என மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர். தற்போது இந்த செய்தி சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.

Leave a Reply