நம் அனைவருக்கும் கண்டிப்பாக Dettol பற்றி தெரிந்திருக்கும். அந்த Dettol ஐ குடித்தால் என்ன ஆகும் எனத் தெரியுமா? அதனை இந்த பதிவில் பார்க்கலாம்.

Dettolலில் குளோராசைலினால் என்ற ஒரு வேதிப்பொருள் உள்ளது. இந்த வேதிபொருளானது நமது உடலில் காயங்கள் ஏதும் ஏற்ப்பட்டால் அந்த காயத்தை சுத்தம் செய்ய உதவுகிறது. மேலும் அதில் எந்த வித தொற்றுகளும் வராமல் தடுக்கிறது.
மேலும் மருத்துவமனைகளில் உள்ள அறுவை சிகிச்சை கருவிகளையும் சுத்தம் செய்ய இது உதவுகிறது. அந்த Dettolஐ நாம் குடித்தால் பின்வரும் விளைவுகளை எல்லாம் நாம் சந்திக்க நேரிடும்.

இந்த Dettol நமது உடலுக்குள் சென்றால் நம் வயிற்றிற்குள் இருக்கும் mucous membrane ஐ சேதப்படுத்துகிறது. நமது மத்திய நரம்பு மண்டலத்தையும் இது பாதிக்கிறது. மேலும் இதனை உட்கொண்டால் நமக்கு அதிக மன அழுத்தம் ஏற்படும். நமது தன்னம்பிக்கையில் குறைவு ஏற்படுகிறது.
இதனை குடித்தால் நமது நாக்கில் எந்த வித சுவையும் அதன் பின் தெரியாமல் போய்விடும். மேலும் நாக்கு முழுவதும் கொப்பளங்கள் வந்து விடும்.

தற்போது நிலவி வரும் கொரோனா சூழ்நிலையில் நிறைய வதந்திகள் வரவி வருகின்றன. அதில் Dettol குடித்தால் கொரோனா வராது எனவும் ஒரு வேளை கொரோனா இருந்தாலும் Dettol குடித்தால் கொரோனா கிருமிகள் அழிந்து விடும் எனவும் வதந்திகள் பரவுகின்றன.
ஆனால் உண்ம்மையில் Dettol குடித்தால் என்ன ஆகும் என தெரிந்து கொள்ளுங்கள். மேலும் குழந்தைகளின் கைகளுக்கு எட்டாதவாறு Dettolஐ வைத்துக் கொள்ளவும்.