CSK vs RCB… தப்பு பண்ணிட்டோம்!!! விரக்தியில் பேசிய கோலி…

விளையாட்டு

IPL 2021 ன் 35 வது போட்டி நேற்று நடைபெற்றது. இது சார்ஜாவில் நடைபெற்றது. நேற்று சென்னை சூப்பர் கிங்க்ஸ் அணியும் ராயல் சலேஞ்சர்ஸ் பெங்களூர் அணியும் மோதிக் கொண்டது. இந்த போட்டியில் csk அணியானது மிகவும் எளிதாக வெற்றியை கைப்பற்றியது. Rcb அணி தோல்வியை தழுவியது.

நேற்று விராட் கோலி மிக அருமையாக விளையாடினார். இருந்த போதிலும் அவர் அணி தோல்வியடைந்தது. ஆனாலும் ஒரு புறம் விராட் கோலியும் csk அணி தலைவர் தோனியும் கட்டிப் பிடித்தவாறு புகைப்படங்கள் வெளியாகின. இது சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது.

இந்நிலையில் தங்களது தோல்வி குறித்து விராட் பேசுகையில், செய்தியாளர்கள் நீங்கள் ஆட்டத்தின் முதல் பாதி நன்றாக தான் விளையாடினீர்கள் எங்கு தவறு செய்ததாக நினைக்கிறீர்கள் என்று கேட்ட பொழுது, கோலி முதல் பத்து ஓவர் நன்றாக தான் விளையாடினோம். ஆனால் போக போக நிறைய விக்கெட்டுகளை இழக்க நேரிட்டது.

175 ரன்கள் எடுத்திருந்தால் ஒருவேளை வெற்றி பெறுவதற்கு நிறைய வாய்ப்புகள் இருந்திருக்கும். ஆனால் 20 ரன்கள் குறைந்து விட்டது. அங்கே தான் தவறு நடந்துவிட்டது. அதே போல csk அணி வீரர்களும் நன்றாக பந்து வீசினார்கள். அவர்கள் வீசிய பந்துகளை சரியாக கணிக்க முடியாததே தோல்விக்கு காரணமாக கூறினார்.

அதே போல் நாங்கள் பந்து வீசுகையிலும் நிறைய விக்கெட்டுகளை எடுக்க தவறி விட்டோம். அந்த இடத்திலும் தவறு நடந்து விட்டது. கிடைத்த வாய்ப்பை சரியாக பயன்படுத்திக் கொள்ளவில்லை என்றார் விராட்.

மேலும் அடுத்தடுத்ததாக தோல்விகளை சந்தித்து வருகிறீர்கள் எப்படி இதனை தாண்டி வரப் போகிறீர்கள் என கேள்வி எழுப்பப்பட்டது.. அதற்கு அவர் இந்த தோல்விகளை நங்கள் முழுமையாக ஏற்றுக் கொள்கிறோம். அடுத்தடுத்தாக இரண்டு போட்டிகளில் தோல்விகளை சந்தித்து இருக்கிறோம்.

ஆனாலும் கண்டிப்பாக இதிலிருந்து மீண்டு வருவோம். மறுபடியும் RCB நன்றாக விளையாடும். rcb அணியினரும் நன்றாக விளையாடுவார்கள் என நம்புகிறேன் எனவும் தெரிவித்துள்ளார்.

தவறுகளை திருத்திக் கொண்டு மீண்டும் வருவோம் என நம்பிக்கை வார்த்தைகளை விராட் தெரவித்துள்ளார். எனவே இனி வரப்போகும் போட்டிகளில் rcb எப்படி விளயாடுகிறது என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.

அதிலும் அடுத்த போட்டியானது RCB vs மும்பை ஆகும். யார் வெற்றி பெறுகிறார் என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம்.

Leave a Reply