நெஞ்சுக்குள்ள குடியிருக்கும் கரப்பான் பூச்சி… X-RAY வில் அதிர்ச்சி!!!

உலகம்

ஜிம்பாவேவை சேர்ந்த ஒரு நபரின் நெஞ்சுப் பகுதியில் கரப்பான் பூச்சி ஒன்று இருப்பதாக ஒரு X-RAY படம் சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.

நாம் சாதாரணமாக நமது வீட்டில் தான் கரப்பான் பூச்சி இருப்பதை பார்த்திருப்போம். ஆனால் இங்கு ஒரு நபரின் நெஞ்சுக் கூட்டில் கரப்பான் பூச்சி இருந்துள்ளது.

ஜிம்பாவேவை சேர்ந்த ஒரு நபர் மிக அதிகமான நெஞ்சு வலியால் அவதிப் பட்டு வந்துள்ளார். எனவே அருகாமையிலுள்ள ஒரு மருத்துவனைக்கு சென்று மருத்துவரை அணுகியுள்ளார். மருத்துவரோ X-RAY எடுக்க வேண்டும் என கூறியுள்ளார்.

அவரும் அதே மருத்துவமனையில் X-RAY எடுத்துள்ளார். ஆனால் அந்த X-RAY வில் மிகப் பெரிய அதிர்ச்சி காத்திருந்தது. அந்த X-RAYவை பார்த்த மருத்துவர்கள் மிகவும் அதிர்ந்து போனார்கள். ஏனெனில் அந்த X-RAYவில் ஒரு கரப்பான் பூச்சியானது அவரது நெஞ்சுப் பகுதியில் இருப்பது தெரிய வந்துள்ளது.

எனவே அந்த மருத்துவர்கள் உடனடியாக அறுவை சிகிச்சை செய்ய வேண்டும் என கூறியுள்ளனர். மேலும் அந்த சிகிச்சை ஜிம்பவேவில் செய்ய முடியாது எனவும் இந்தியாவிற்கு சென்று அறுவை சிகிச்சை செய்யுமாறும் கூறியுள்ளனர்.

அந்த நபரும் தனது சொத்துகளையெல்லாம் விற்று விட்டு இந்தியா வந்துள்ளார். இங்கு உள்ள மருத்துவமனையில் தனது ரிப்போர்ட்களையெல்லாம் காண்பித்து உள்ளார். அங்கு அந்த மருத்துவர்களும் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

ஆனால் இந்திய மருத்துவர்கள் மீண்டும் ஒரு முறை X-RAY எடுத்து பார்க்க வேண்டும் என அந்த நபரிடம் கூறியுள்ளனர். அதன் படியே X-RAY எடுத்து பார்த்ததில் அவரது நெஞ்சுப் பகுதியில் எந்த கரப்பான் பூச்சியும் இல்லை என்பதும் வேறு எந்த பிரச்சனையும் அவரது உடம்பில் இல்லை என்பதும் தெரிய வந்தது.

பிறகு எங்கிருந்து வந்தது அந்த கரப்பான் பூச்சி என ஆய்வு செய்த போது, ஜிம்பாவேவில் X-RAY எடுத்த மருத்துவமனையில் உள்ள X-RAY கருவியில் அந்த கரப்பான் பூச்சி இருந்ததாகவும் அது தான் அவரது X-RAYவில் தெரிந்துள்ளது எனவும் தெரிய வந்துள்ளது.

Leave a Reply