சீனாவில் உள்ள ஒரு நபர் இலவச உணவுக்காக முதல் தர விமான டிக்கெட்டை வாங்கி அதனை 300 முறை மீண்டும் மீண்டும் பதிவுசெய்துள்ள நிகழ்வு சீன விமான நிலையம் ஒன்றில் நடந்துள்ளது.

இந்த சம்பவமானது கிழக்கு சீன விமான நிலையத்தில் நடந்துள்ளது. அங்கு அவர், முதல் தர டிக்கெட் ஒன்றை வாங்கியுள்ளார். அதன் பின்னர் இலவச உணவை உட்கொள்ளுவதற்காக அந்த டிக்கெட்டை மீண்டும் மீண்டும் பதிவு செய்துள்ளார்.
சீன செய்த்தித்தாளில் இந்த செய்தி இடம் பெற்றுள்ளது. அதில், அந்த நபர் சர்வதேச விமான நிலையத்தில் பயணிகள் காத்திருக்கும் பகுதிக்கு செல்வதற்காக இந்த முதல் தர VIP டிக்கெட்டை பயன்படுத்தியுள்ளார்.
இந்த VIP டிக்கெட்டை பயன்படுத்தி முதல் தர பயனர்களுக்கான முதல் தர உணவுகளை இலவசமாக சாப்பிட முடியும்.
முதல் நாள் அவர் டிக்கெட்டை பெற்றதும் எல்லா பயணிகளைப் போலவே அவரும் தனது பயணத்திற்கு முன்பு இலவச உணவை சாப்பிட்டுள்ளார். அதன் பின்னர் அன்று செல்ல வேண்டிய பயணத்தை ரத்து செய்து விட்டார். மேலும் அந்த டிக்கெட்டை அடுத்த நாள் பயணத்திற்கு தேதியை மட்டும் மாற்றியுள்ளார்.
மீண்டும் அடுத்த நாள் சென்று பயணத்திற்கு முன்பு இலவச உணவை சாபிட்டுள்ளார். சாப்பிட்ட பிறகு தனது பயணத்தை ரத்து செய்து விட்டு அதே டிக்கெட்டில் அடுத்த நாள் பயணத்திற்காக தேதியை மட்டும் மாற்றம் செய்து பதிவு செய்துள்ளார்.

இதனை போலவே அவர் 300 முறைக்கும் மேல் செய்து இலவச சாப்பாட்டினை சாப்பிட்டு உள்ளார். ஆனால் ஒருமுறை கிழக்கு சீன விமான நிலைய அதிகாரிகள் இதனை கண்டுபிடித்துவிட்டனர்.
ஆனால் இந்த சம்பவம் எந்த விதிகளுக்கும் எதிரானது அல்ல என்பதால், அந்த நபர் மீது எந்த வித சட்டப் பூர்வ நடவடிக்கைகளும் எடுக்க இயலாது என அந்த விமான அதிகாரிகள் ஒப்புக் கொண்டனர்.
ஆனாலும் கிழக்கு சீன விமான நிலைய அதிகாரிகள் அவரிடம் சென்று இந்த செயலை தொடர தடை விதிப்பதாக கூறினர். அவரும் ஏற்றுக்கொண்டார்.

மேலும் அவர் பதிவு செய்த டிக்கெட்டானது VIP டிக்கெட் என்பதால் அதனை cancel செய்தால் செலுத்திய தொகையானது திரும்ப தரப்படும். எனவே அவர் தனது டிக்கெட்டை கேன்சல் செய்துவிட்டு ஒரு வருட உணவையும் இலவசமாக சாப்பிட்டது மட்டுமல்லாமல் அவரது பணத்தையும் திரும்ப பெற்றுள்ளார்.