வருத்தத்தில் பிக்பாஸ் அர்ச்சனா! அப்படி என்ன தப்பு செய்து விட்டோம்?

சினிமா

எங்கள் மீது சிலர் சமூக வலைதளங்களில் அவதூறு பரப்பிவருவது வருத்தம் தருகிறது என தமிழ் தொலைக்காட்சிகளின் நி க ழ் ச்சி தொகுப்பாளரும், பிக்பாஸ் போட்டியாளருமான அர்ச்சனா மற்றும் அவரின் மகள் சாரா தெரிவித்துள்ளனர்.

பிக்பாஸ் நி க ழ் ச்சியில் கலந்து கொண்டதிலிருந்து பல்வேறு எதிர்மறை விமர்சனங்களை அர்ச்சனா சந்தித்து வருகிறார்.

இந்த நிலையில் ஒரு தனியார் தொலைக்காட்சியில் தாய்க்கும், அவர்களது குழந்தைகளுக்கும் இடையே உள்ள உறவை மையமாக கொண்டு வெளிவர இருக்கும் ‘தாயில்லாமல் நானில்லை’ என்ற நி க ழ் ச்சியை அர்ச்சனாவும், அவரது மகள் சாராவும் தொகுத்து வழங்கவுள்ளனர்.


அது தொடர்பான முன்னோட்ட காட்சிகளை அந்த தொலைக்காட்சி நிறுவனம் வெளியிட்டு இருந்த நிலையில் அர்ச்சனா மற்றும் அவரது மகள் சாரா ஆகிய இருவர் மீதும் தவறான கருத்துக்களை சமூக வலைதளத்தில் பரப்பி வருகின்றனர்.

இதுபோன்ற மோசமான கருத்துகள் தங்களை புண்படுத்துவதாகவும், நிறைய பெண்களே இது போன்ற மோசமான சில கருத்துக்களை பரப்புவது மிகுந்த வருத்தம் தருவதாக தெரிவித்துள்ளனர். இதுகுறித்து சாரா தனது இன்ஸ்டாகிராமில் கருத்து ஒன்றையும் பதிவிட்டுள்ளார்.

அதில் ”நாங்கள் அன்பை வரவேற்பவர்கள். எங்களை உங்களுக்கு பிடிக்கவில்லை என்றால் அதை நாங்கள்மதிக்கிறோம் ஆனால் அதை உங்களுடனேயே வைத்து கொள்ளுங்கள். நீங்கள் வெளிப்படுத்தும் கருத்துக்கள் எங்களை பாதிப்படைய செய்கிறது. எனவும் எங்களை புரிந்து கொண்டு அன்பு செலுத்துபவர்களுக்கும் ஆதரவு கொடுப்பவர்களுக்கும் நன்றி”. தெ – ரிவித் து ள் ளா ர்.
மேலும் இதுகுறித்து அர்ச்சனா கூறிகையில், நாங்கள் பொதுவெளியில் பிரபலங்களே தவிர, பொதுச்சொத்துக்கள் இல்லை என காட்டமாக தெ – ரிவித் து ள் ளா ர்.

Leave a Reply