வெண்பாவிற்கு செக் வைக்கப் போகும் பாரதி.. புது திருப்பத்திற்கு காத்திருக்கும் கண்ணம்மா இணையத்தில் வைரல் ஆகிறது !!

சினிமா

VIJAY டிவியின் ப்ரைம் டைம் சீரியல்களில் ஒன்றான பாரதிகண்ணம்மா சீரியல் கடந்த வாரம் முழுவதும் விறுவிறுப்பான கட்டத்தில் ஒளிபரப்பானது. ஏனென்றால் கடந்த வாரம் பாரதி மற்றும் கண்ணம்மா இருவரும் ஒன்றாக இனிமேல் வாழ சேர்ந்து போகின்றனர் என எதிர்பார்த்த நிலையில், பாரதி போட்ட ஒரே கண்டிஷனால் ஒட்டுமொத்த குடும்பமும் பாரதிக்கு எதிராக திரும்பியது.

இதைத்தொடர்ந்து தற்போது பாரதிகண்ணம்மா சீரியலின் அதிரடி கட்டம் அரங்கேறி உள்ளது. ஏனென்றால் வெண்பாவின் சித்தப்பா தற்போது வெண்பாவின் தொலைபேசியில் இருந்து பாரதிக்கு போன் செய்து, இவ்வளவு நாள் சீரியலில் மறைத்து வைத்த உண்மைகளை எல்லாம் அவிழ்த்து விட்டுள்ளார்.

பாரதிக்கு உடலில் எந்தக் குறைபாடும் இல்லை என்றும் ரிப்போர்ட்டை வெண்பா தான் மாற்றி வைத்துள்ளார் என்றும் பாரதிக்கு வெண்பாவின் சித்தப்பா தொலைபேசியின் வாயிலாக எல்லா உண்மைகளையும் தெரிவித்துவிட்டார்.


ஏற்கனவே இதே போன்று வெண்பாவின் சித்தப்பா, பாரதிக்கு உண்மையை தெரிவிக்க முயற்சி செய்தபோது, வெண்பா அவருடைய சித்தப்பாவிற்கு மயக்க மருந்து கொடுத்து வீட்டிலேயே அடைத்து வைத்து விட்டார். இவ்வளவு நாள் அந்த மயக்க மருந்தில் இருந்து கிடந்த வெண்பாவின் சித்தப்பா திடீரென்று, அரை மயக்கத்தில் எழுந்து வெண்பாவின் தொலைபேசியில் இருந்து பாரதிக்கு எல்லா உண்மைகளையும் தெரியப்படுத்தி விட்டார்.

இவர் பாரதியிடம் பேசும்போது கூட இன்று வரை அரை மயக்கத்திலேயே வெண்பா அவரை வைத்திருப்பது தெரிய வருகிறது. எனவே எல்லா உண்மைகளையும் அறிந்து கொண்ட பாரதி, கண்ணம்மாவிடம் மன்னிப்பு கேட்க வி – ரைந் து செல்வாரா அல்லது வெண்பாவைப் பழிவாங்க முயற்சி செய்வாரா என்பதை பார்ப்போம்.

எனவே இவ்வளவு நாள் சீரியலில் மறைக்கப்பட்ட உண்மைகள் எல்லாம் வெளிச்சத்திற்கு வந்துள்ள நி லை – யில் பாரதிகண்ணம்மா சீரியலின் இரண்டாம் பாகம் கூடிய விரைவில் துவங்கப் போகிறது என்று ர சிகர் – கள் யூகித்துள்ளனர்.

Leave a Reply