43 வயதில் கவர்ச்சி போஸ்.. கொடுத்து ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்திய பூமிகா – வைரலாகும் புகைப்படம் இதோ !!.

சினிமா

தனது முதல் படமான ரோஜா கூட்டம் படத்தில் வரும் ‘ஆப்பிள் பெண்ணே நீ யாரோ’ என்ற பாடலின் மூலம் அனைத்து ரசிகர்களின் கவனத்தையும் ஈர்த்துள்ள ஹீரோயின் தான் பூமிக்கா. இந்தப் படத்தில் கிடைத்த வெற்றியை தொடர்ந்து விஜய்யுடன் இணைந்து ‘பத்ரி’ திரைப்படத்தில் இயல்பான நடிப்பினை கொடுத்திருப்பார். அதன் பின் ஒரு சில படங்களில் மட்டும் நடித்து வந்த பூமிகா ஒரு கட்டத்தில் திரையுலகில் இருந்து காணாமல் போய்விட்டார்.

பின்னர் திடீரென்று சூர்யாவுடன் இணைந்து ‘ஜில்லுனு ஒரு காதல்’ என்ற படத்தின் மூலம் ரீ என்ட்ரி கொடுத்திருந்தார். அதன் பிறகு தொடர்ந்து இவரின் படங்கள் வெளியாகும் என்று ரசிகர்கள் எதிர்பார்த்திருந்தனர். ஆனால் தமிழில் சினிமாவில் பூமிகாவிற்கு பட வாய்ப்பு குறைந்துள்ளதால் தெலுங்கு திரையுலகிற்கு சென்று விட்டார். அதையடுத்து திருமணம் செய்து கொண்டார்.

திருமணத்திற்குப் பின்பு தெலுங்கில் ஒரு சில திரைப்படங்களில் நடித்து வந்தார். மீண்டும் தமிழில் சமந்தாவின் “யு டர்ன்” திரைப்படத்தில் நடித்திருந்தார். தற்போது, உதயநிதி ஸ்டாலின் நடிப்பில் உருவாகின்ற “கண்ணை நம்பாதே” திரைப்படத்தில் பூமிகா ஒரு முக்கிய வேடத்தில் நடித்து வருகின்றார்.

இந்நிலையில் 43 வயதை எட்டியுள்ள பூமிகா தற்போதும் தனது உடலை மிகவும் ஃபிட்டாக வைத்திருக்கிறார். சமீபத்தில் அவர் கருப்பு நிற உடையில் எடுத்திருக்கும் லேட்டஸ்ட் போட்டோ இணையத்தில் ட்ரெண்டிங் ஆகி வருகிறது.

Leave a Reply