கே ஜி எஃப் 2 ரசிகர்களுக்கு காத்திருக்கும் மெகா கொண்டாட்டம்.. வெளியான அதிர்ச்சி தகவல்

சினிமா

K .G .F 2 ரசிகர்களுக்கு மெகா கொண்டாட்டம் ஒன்று காத்துக் கொண்டுள்ளது.
கன்னட திரை உலகில் பிரபல ஹீரோவாக வலம் வருபவர் யஷ். இவரது நடிப்பில் வெளியான கேஜிஎப் திரைப்படம் மிகப்பெரிய வெற்றியை பெற்றதைத் தொடர்ந்து இதன் 2-ம் பாகம் வெளியாகி மக்கள் மத்தியில் மாபெரும் வரவேற்பை பெற்றது. தற்போது வரை கேஜிஎப் 2 படத்தின் மீதான ஆர்வம் யாருக்கும் குறையவில்லை.

இந்த நிலையில் இந்த படம் வெகு விரைவில் தொலைக்காட்சி சேனலில் ஒளிபரப்பாக இருப்பதாக அறிக்கை கிடைத்துள்ளது.

இந்த படத்தின் சாட்டிலைட் உரிமையை ஜீ தமிழ் நிறுவனம் கைப்பற்றி இருப்பதன் காரணமாக விரைவில் இந்த படம் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாக உள்ளது.

ஆனால் படம் எப்போது எந்த தேதியில் ஒளிபரப்பாக போகிறது என்பது குறித்து தகவல்கள் இன்னும் வெளியாகவில்லை. விரைவில் இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Leave a Reply