5 மாதத்திற்கு உலகம் முழுவதும் NO INTERNET!!! அதிர்ச்சியில் விஞ்ஞானிகள்…

உலகம்

INTERNET இல்லாத வாழ்க்கையை உங்களால் நினைத்து பார்க்க முடியுமா? ஒரு வேளை ஒரு சில மாதங்கள் உலகில் எங்குமே INTERNET கிடைக்காது என்ற நிலை வந்தால்….

கலிபோர்னியாவில் ஆராய்ச்சி பல்கலைகழகத்தில் வேலை செய்யும் ஒரு பெண் ஒரு ஆராய்ச்சி கடிதத்தை வெள்ளியுட்டார். அதில் அவர் கூறியுள்ளதாவது, solar super storm எனக் கூடிய சூரிய சூப்பர் புயல் ஒன்று பூமியை நோக்கி வருவதாக கூறியுள்ளார். இது நாம் இதுவரை பார்த்திராத ஒன்றாக இருக்கும்.

solar super storm என்பது சூரியனிடமிருந்து வரும் அதிகப்படியான கதிர்வீச்சுகள் பூமிக்கு வருவது தான். அப்படி ஒருவேளை இந்த கதிர்வீச்சுகள் பூமிக்கு அதிகப்படியாக வந்தால் என்ன ஆகும் என்றால், இந்தியா மட்டுமல்லாமல் உலகம் முழுவதுமே இது மிகப் பெரிய தாக்கத்தை ஏற்ப்படுத்தும் என தெரிவித்துள்ளனர்.

இதன் தாக்கத்தினால் முக்கியமாக பாதிக்கப்படுவது எதுவென்றால் internet தான்.
இதன் விளைவாக உலகம் முழுவதும் internet முடக்கப்படும் அல்லது செயலிழக்கப்படும் என கூறுகின்றனர். இது போன்ற செய்திகள் அவ்வப்போது வருவதுண்டு. ஆனால் இந்த சூரிய சூப்பர் புயல் வந்தால் ஒரு சில நாட்களுக்கு அல்ல ஒரு சில மாதங்களுக்கு internet துண்டிக்க பட வாய்ப்புகள் உண்டு.

அமெரிக்காவில் ஒரு நாளைக்கு மட்டும் internet முடக்கப்பட்டால் 7 பில்லியன் டாலர்கள் இழப்பு ஏற்படும். ஒரு நாள் internet இல்லை என்றாலே பல பிரச்சனைகளை சந்திக்க நேரிடும். அதில் பண பரிவர்த்தனை, ஷேர் மார்க்கெட் போன்ற பல இழப்புகளை ஏற்க நேரிடும். அமெரிக்கா ஒரு நாட்டிற்கே 7 பில்லியன் டாலர் என்றால் உலகம் முழுவதும் கணக்கு செய்தால் அது கணக்கிட முடியாத அளவிற்கு சென்று விடும்.

இது குறித்து பத்திரிக்கை வெளியிட்ட பெண் விஞ்ஞானி கூறுவதாவது, இன்றைய தினத்தில் இதனை எதிர் கொள்வதற்கான எந்த வித டெக்னாலஜியும் நம்மிடம் இல்லை. எனவே இந்த சூரிய சூப்பர் புயல் வந்தால் கண்டிப்பாக நாம் பாதிக்கப்படுவோம் என்கிறார்.

ஆனால் மறுபக்கம் NASA இது குறித்து கூறுகையில், ஏற்கனவே ஒரு சில ஏற்பாடுகளை நாங்கள் விண்வெளியில் செய்து வைத்திருக்கிறோம். அப்படி ஏதேனும் சூரிய புயல் வந்தால் அது 12 மணி நேரத்திற்கு முன்பே நமக்கு தெரிவித்து விடும். எனவே அந்த 12 மணி நேரத்தில் internet ஐ நாமே முடக்கிவிடலாம்.

அப்படி செய்தால் ஒருவேளை நமது internet deviceகள் பாதுகாகப்படலாம் என ஆராய்ச்சி செய்து வருகின்றனர். ஆனாலும் இந்த solar super storm ஆனது பூமிக்கு வருவதற்கு அதிகம் வாய்ப்புகள் உள்ளன என ஆராய்ச்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

Leave a Reply